18 இலங்கை பிரஜைகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இருந்து, கென்யாவின் நைரோப் நகரத்தின் ஊடாக, கென்ய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

38 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 18 பேர் மாத்திரமே நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய 20 பேர் திரும்பியனுப்படும் தினம் குறித்து நிச்சயமாக கூற முடியான என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாடு திரும்பியவர்கள் 21 நாள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளால் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.