2.30 மணிக்கு முதலாவது பெறுபேறு

பொதுத் தேர்தலில் முதலாவது பெறுபேற்றை நாளை(06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முழுமையான தேர்தல் பெறுபேறுகளை 07ஆம் திகதிக்குள் வெளியிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.