2017 ஆம் ஆண்டின் சிறந்த மாகாண சபையாக மத்திய மாகாண சபை மலர வேண்டும்

இந்த 2017 ஆம் ஆண்டில் நாட்டின் தலை சிறந்த மாகாண சபையாக மத்திய மாகாண சபை மலர வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார் இம்மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். எம். உவைஸ். மத்திய மாகாண சபையின் இந்த ஆண்டின் கன்னி அமர்வு எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பம் ஆகின்றது. இந்நிலையிலேயே மேற்கண்டவாறு வாழ்த்தி உள்ள உவைஸ் இதற்காக இம்மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்பட வேண்டும் என்று பகிரங்கமாக கோரி உள்ளார். கடந்த காலத்தை திரும்பி பார்க்கின்றபோது மக்களுக்கு இன்னமும் நாம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது என்றும் தெரிவித்த இவர் இதனால் இந்த வருடத்தை மக்கள் சேவைக்கான வருடமாக இம்மாகாண சபை உறுப்பினர்கள் பிரகடனப்படுத்த வேண்டும் என்றார். இதுவே வாக்களித்த மக்களுக்கு செலுத்துகின்ற நன்றி கடன் ஆகும் என்றும் கூறினார்.