50 ஆண்டுகளுக்குப் பின் பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கின்றதுடன், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் செல்கின்றது. 

அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஜூலை 29 அன்று, பூமி அதன் குறுகிய நாள் சாதனையை முறியடித்தது. 1960 க்கு பின் மிகவும் குறுகிய காலத்தில் முடிந்த மாதமாக அது கருதப்பட்டது. 

இந்த நிலையில் ஜூலை 29, பூமி மிகவும் குறுகிய நாளை பதிவு செய்தது. இதன் மூலம் பூமி வேகமாக சுழல்வது மீண்டும் தெரியவந்துள்ளது. 

2020 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று பூமி மிகவும் வேகமாக சுழன்று, 24 மணி நேரத்திற்குள் ஒரு நாளை நிறைவு செய்தது. அதாவது 1.47 மில்லி செகண்ட்ஸ் முன்னதாகவே பூமி தனது சுழற்சியை நிறைவு செய்தது. 

இந்த நிலையில் நேற்று பூமி 1.59 மில்லி செகண்ட்ஸ் முன்னதாகவே தனது ஒரு நாள் சுழற்சியை நிறைவு செய்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு பூமி இதைவிட வேகமாக சுழன்று இந்த சாதனையை முறியடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.