7,000 பேரைப் பலியெடுத்த உக்ரேன்-ரஷ்யப் போர்

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,  அண்டை நாடுகளுக்கு அகதிகளாக உக்ரேனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.