7,000 பேரைப் பலியெடுத்த உக்ரேன்-ரஷ்யப் போர்

இந்நிலையில் இப்போரில் தற்போது வரை  சுமார் 7 ,000  பொது மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ”போர் தொடங்கிய பெப்ரவரி மாதம்  24ஆம் திகதியிலிருந்து  கடந்த 26ஆம் திகதி வரையில் போரில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 6,884 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார்  10,947 பேர் காயமடைந்தனர்.

இது தவிர ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரேன் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மாத்திரம்  483 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதோடு  1,633 பேர் காயமடைந்தனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது