சீனாவில் COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கை இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி புதிதாக COVID-19-ஆல் தொற்றுண்டதாக உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையானது நேற்றைய 1,749 பேர் என்ற நிலையிலிருந்து 394ஆக இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.