உண்மை உறங்குகிறது!

அதற்குக் காரணம், தமிழ்த் தலைமைகள் பிற்போக்காக இருந்ததும், நடைமுறைக்கு உதவாத கொள்கைகளைப் பின்பற்றியதும், பிழையான தந்திரோபாயங்களைப் கைக்கொண்டதுமாகும். இதை எவரும் மறுத்துவிட முடியாது.

அதே வேளையில் தமிழ்நாட்டிலுள்ள தமிழின பிழைப்பு அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ள தமது ‘இரத்த உறவு’களுக்காக இயக்கம் நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு காலத்துக்காலம் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன்போது அவர்கள் இலங்கையின் வடக்கு பகுதியிலிருந்து 20 மைல் தூரத்தில் இருந்த போதிலும் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியாதது போல மிகைப்படுத்தப்பட்ட பொய்ச் செய்திகளைத் தமிழக மக்களிடையே பரப்பி வந்துள்ளனர்.

இதன் விளைவு இரண்டு வகைப்பட்டது. ஒன்று தமிழக மக்களைத் தவறாக வழி நடத்தியது. மற்றது, சிங்கள மக்களிடையே ஆண்டாண்டு காலமாக தமிழகம் பற்றி இருந்து வரும் அச்சத்துக்கு மேலும் உருவேற்றி விட்டது.
எது எப்படியிருந்தாலும் அவர்கள் பரப்பிய தவறான கருத்துக்கள் சாதாரண தமிழ் எழுத்தாளர்களையும் பற்றிப் பிடித்துள்ளதைக் காண முடிகிறது. அதற்கு உதாரணமாக கீரனூர் ஜாகிர்ராஜா என்ற எழுத்தாளரின் பதிவு ஒன்றை சமீபத்தில் சுட்டிக் காட்டியிருந்தேன். இப்பொழுது இன்னொரு உதாரணம்:

நாஞ்சில் நாடன் என்பவர் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பிரபல எழுத்தாளர்களில் ஒருவர். சமீபத்தில் அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்ற தொகுப்பைப் படித்த போது அதில் ஒரு கதையில் இவ்வாறு வருவதை அவதானிக்க முடிந்தது.

‘….மொத்தமா ஒரே நாள்லே ஈழத்திலே கொண்ணு குவிச்ச கணக்கே எச்சுத்தான்’. (பக்கம் 134)

இலங்கை நிலவரம் குறித்து தமிழக மக்களிடையே உண்மையான விபரங்களை விளக்காததின் விளைவு இது.