கண்டி யாத்திரையும் இம்புல்கொடே வீரயாவும்

(ஞானகீர்த்தி மீலங்கோ)

பண்டா – செல்வா உடன்படிக்கை என்று அறியப்பட்ட பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கையானது சுதந்திரத்துக்குப் பின்னர் இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான நடவடிக்கையாகும். ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இங்கு இரண்டு விடயங்களை நோக்குதல் தகும்.