குடும்ப வன்முறைக்கு பெண்கள் பாதிக்கப் படுவதை அங்கீகரிக்கும் சமூகம், ஆண்கள் பாதிக்கப் படுவதை புறக்கணிக்கிறது.

ஒரு தடவை, நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தியில், “குடும்ப வன்முறைக்கு ஆண்களும் பலியாகிறார்கள்” என்று தெரிவித்து இருந்தனர். அதற்குப் பின்னர், சமூக நல தொண்டு நிறுவனங்கள் இந்த விடயத்திலும் கவனமெடுத்து வருகின்றன. பொதுவாக பாதிக்கப் பட்ட ஆண்கள் வெட்கம் காரணமாக வெளியே சொல்வதில்லை.

குடும்ப வன்முறைக்கு பெண்கள் பாதிக்கப் படுவதை அங்கீகரிக்கும் சமூகம், சிறிதளவே என்றாலும், ஆண்கள் பாதிக்கப் படுவதை புறக்கணிக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் உள்ள நிலைமை. ஆகையினால் இந்தப் பிரச்சினையை அலட்சியப் படுத்தி புறந்தள்ள முடியாது.

மேலும், பொருளியல் ரீதியான சிந்தனையும், தனிநபர் வாதமும், மனிதர்களை படு மோசமான சுயநலவாதிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல. நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதார அமைப்பும், ஆண்களையும், பெண்களையும் தன்னலம் கருதும் இயந்திர மனிதர்களாக மாற்றி விட்டுள்ளது.

(Vairavanathan Sivarathan)