சமூக அருவருப்பும் கரோனாவும்.

சீனாவில் கரோனா பரவத் தொடங்கியபோதே அதனுடன் சமூக அருவருப்பும் சேர்ந்து பரவத் தொடங்கியது. சீன மக்கள் என்றாலே கரோனா வைரஸைப் பரப்ப வந்தவர்கள் என்பது போல வெறுப்பு காட்டப்பட்டது. சில இடங்களில் சீன மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டனர். சீனரைப் போல உருவ ஒற்றுமை உடைய தேசத்தவர்கள்கூடப் பாதிக்கப்பட்டனர். அவர்களது தொழில் வர்த்தக நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டன.