தமிழகத்தில் இலங்கை அகதிகளும்,நாடுதிரும்புதலும் பாகம்-2

(தோழர்ஸ்ரனிஸ்)
தமிழகத்தில் முகாம்களில் உள்ள அகதிகளுக்கு தமிழக அரசின் நியாயவிலைகக்டை மூலம் அரிசி, மண்ணெண்ணை, சீனி, பருப்பு, பாமாயில் என்பன வழங்கப்படுகிறது.அத்துடன் மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. மாதக் கொடுப்பனவாக ஒரு குடுப்பத்தின் தலைவருக்கு ரூ.1000,12வயதுக்கு மேல் ரூ.750,12வயதுக்குக் கீழ் ரூ.450 வழங்கப்படுவதுடன் அரிசி மாதமொன்றுக்கு 08 வயதுக்கு மேல் 12கிலோ,08வயதுக்கு கீழ் 6கிலோ.2கிலோ அரிசி 55 சதத்திற்கே வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஒரு குடுப்ப அட்டைக்கு 3லிட்டர்,சீனி 2கிலோ என்பனவும் வழங்கப்படுகிறது.


இது தவிர அரசின் நலத்திட்டங்கான முதியோர் உதவித்தொகை, விதவைக் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பெண்களுக்கான முத்துலெட்சுமி உதவி, ஐனனிசுரக்ஸா, திருமணஉதவி , இரு பெண்குழந்தைகளுக்கான உதவி, தையல் இயந்திரம், மாணவர்களுக்கு மடிகனிணி, மிதிவண்டி என்பனவும் தமிழக மக்களுக்கு வழங்கப்படுவதைப்போல் அகதி மக்களுக்கும் வழங்கப்படுகிது.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நாடு திரும்பும் ஆர்வம் அதிகரித்திருப்பதை அண்மைக்காலமாக விமானத்தின் மூலம் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஏனும் நாடு திரும்புவர்களின் எண்ணிக்கையை வைத்தும் நாம் அவர்களின் ஆர்வத்தை அறிய முடிகிறது.
தாயகம் திரும்புகிறவர்கள் இரண்டு விதமான முறையில் தங்களது பயன ஏற்பாட்டை செய்கிறார்கள் ஒன்று ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகத்தினூடாக இது தமிழகத்தின் முகாம்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருத்தமாக இருந்து வருகிறது.வெளியில் பொலிஸ் பதிவில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாத போதும் எந்த உதவியும் இல்லாமல் வெளியில் இருப்பவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கான பயண ஏற்பாட்டை ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகம் செய்து கொடுக்கிறது.
மற்றயது தங்கது சொந்தச் செலவில் தாயகம் திரும்புவது, இம்முறையே செல்ல நினைப்பவர்கள் தங்கது பயன நடைமுறைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் தாயகம் திரும்ப முடியும்.இதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகம் எந்தவித உதவிகளும் செய்யாது.இப்படி முயல்பவர்கள் விரைவாக தாயகம் செல்லும் வாய்ப்புகள் உள்ளது.
தற்போது தாயகம் திரும்பிக்கொண்டிருப்பவர்கள் விமான மூலமே சென்று கொண்டிருக்கின்றனர்.நீண்ட பல வருடங்காக முகாமில் வாழ்ந்த அவர்கள் அதிகளவான பொருட்கள்; வைத்திருப்பதால்.தங்களது முழு உடமைகளiயும் கொண்டு செல்லமுடியாமல் பல பொருட்களை அறாவிலைக்கு விற்றுச் செல்லும் நிலைமை காணப்படுகிறது.விமானத்தில் வரையறுக்கப்பட்ட எடையே இவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.இந்நிலைமையில் தாயகம் திரும்புபவர்களும்.தாயகம் செல்ல நினைப்பவர்களும் “கப்பல் எப்போ விடுவார்கள்” என கேட்டவண்ணமே உள்ளனர்.
கப்பல் பயணம் நன்மை தரும்
தற்போது நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை சொற்பமாக உள்ளதால்,ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் விமானத்தில் அவர்களை அனுப்புவதைத் தவிர வேறு வழி அவர்களுக்கும் இல்லை.ஒரு கப்பலுக்கு அளவான எண்ணிக்கை சேர்ந்தால் அவர்கள் கப்பல் எற்பாடு செய்வதில் தடங்கல் இருக்காது.தற்போது நாடு திரும்புகிறவர்கள் அவர்களின் சொந்த விருப்பதிலேதான் செல்கிறார்கள்.அகதிகளை அனுப்பும் தீர்க்கமான முடிவு இந்திய அரசிடம் இதுவரை வெளிப்படவில்லை. .என் மக்களை அனுப்பு நாங்கள் பார்த்துக்கொள்கிறோhம் என இலங்கை அரசும் இதுவரை கேட்தாகவும் தெரியவில்லை.இப்படி பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற நிலைமையே காணப்படுகிறது.
அகதி மக்கள் கப்பலில் நாடு திரும்பும் விடயத்தில் ஈழ ஏதியிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் நிறுவனர் சந்திரஹாசன் அவர்கள் அக்கறைகொண்டு செயற்பட்டு வருகிறமையை நாம் இந்த .இடத்தில் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோhம்.
கப்பல் பயணம் என்பது நாடு திரும்பும் மக்கள் தங்களது உடமைகள் பலவற்றைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.இதனால் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புகளும் உள்ளது.அத்துடன் கப்பல் போடப்பட்டு அதில் அவர்கள் தாயகம் திரும்பும் பட்டசத்தில் இலங்கை அரசால் அவர்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டு அவர்களது குறைகள் பரிசீலிக்கும் வாய்ப்புகளும் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் வடக்கு,கிழக்கு பகுதியைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இவர்களுக்கு தலைமன்னார் இறங்குதுறையோ அல்லது பலாலி இறங்கு துறையோ சாலப்பொருத்தமாக இருக்கும்.பலாலி இறங்குதுறை தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கான இறங்கு துறையாக கடந்தகாலங்களில் நடைமுறையில் இருந்ததில்லை தலைமன்னார் இறங்குதுறைதான் அரசின் தேர்வாக உள்ளது.தற்போது இது பழுதடைந்த நிலையில் கப்பல் தரிப்பிற்கு ஏற்றதாக பராமரிப்பு இன்றி உள்;ளதாக தெரிகிறது..
தாயகம் திரும்புதல் கப்பலில் இடம்பெற்றால்,ராமேஸ்வரம் தலைமன்னார் பாதையே இந்திய.இலங்கை அரசுகளின் தெரிவாக இருக்கும். அதற்கு முன் தலைமன்னார் துறைமுகத்தை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு இலங்கை அரசிற்கு உள்ளது.அதனைச் செய்யவதற்கு வடக்கு மகாண சபை நெருக்குவாரம் செய்ய வேண்டும்.தங்களது மக்கள் அகதிகளாகச் செல்லும் போது உயிரைக் கையில் பிடித்து தப்பி ஆபத்தான பயணம் மேற்கொண்டிருப்பர் அவர்கள் துன்பப் படாமல் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் ஆளுபவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
நாடு திரும்புபவர்கள் எதிர்பார்ப்பு
உடமையை இழந்து நிர்க்கதியாய் தங்களது சொந்த இடத்துக்கு திரும்பும் மக்கள் தங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றியும்,இழந்த வாழ்க்கையை மீட்பதற்கான வழிமுறைகள் பற்றியும் குறிப்பாக வாழ்வாதாரம் பற்றியும் பெரிதும் சிந்திக்கின்றனர்.
கல்வி,வேலைவாய்ப்பு கிடைக்குமா? ஏன்பவை பற்றியும்,இருக்க இடம் கிடைக்குமா? காணி இல்லாதோருக்கு காணி கிடைக்கவாய்ப்புகள் உள்ளனவா? மீண்டும் சண்டை ஏற்பட்டால் என்ன செய்வது.இந்தியாவில் கிடைத்தது போல் அரசு சலுகைகள் கிடைக்குமா? என்ற பல எதிர்பார்ப்புகள் அவர்களிடம் உள்ளது.அவர்களது எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டியது இலங்கை அரசு மற்றும் மாகாண சபையின் கடமையாகும.; குறிப்பாக நாடு திரும்பியவர்கள் வடக்கு கிழக்கைச் சார்ந்தவர்களாக இருப்பதால் அந்த மாகாண சபைகள் இதில் கரிசனையும்,அக்கறையும் காட்ட வேண்டும்.

தாயகம் திரும்பியவர்களுக்கு வடக்கு,கிழக்கு மகாண சபை என்ன செய்கிறது?
தாயகம் திரும்பியோர் மீது இதுவரை வடக்கு,கிழக்கு மாகாண சபை அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.போரினால் பாதிக்கப்பட்டு இகதிகளாக சென்ற அவர்கள் போரற்ற சூழ்நிலையில் தாயகம் திரும்புகிறார்கள்.அவர்களுக்கு அந்தப்பாதிப்பின் வடுக்களை இல்லாமல் செய்ய வேண்டும். தற்போhது தமிழகத்தில் இருந்து வருபவர்கள் கொழும்பு விமான நிலையத்திற்கே வந்துகொண்டிருக்கின்றனர்.அவர்களை வடக்கு,கிழக்கு மாகாண சபையினர் அங்கு சென்று வரவேற்கலாம்.அவர்களின் தேவைகள் பற்றி அறிந்து இலங்கை அரசுடன் இணைந்து அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
பெரும்பாலனவர்கள் இருக்க சொந்தக் காணி இல்லாதவர்களாக உள்ளனர்,ஆவணங்கள் இன்றி பலர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.அவர்கள்; அதனைப் பெறுவதற்கு விசேட முகாம்களை நடாத்தி அதனைப் பெறுவதற்கு வழிவகைகளைச் செய்யலாம்.
வடக்கு,கிழக்கு மாகாண சபையில் இருக்கும் சில உறுப்பினர்களும்,பாராளுமன்றத்தின் சில உறுப்பினர்களும் இதில் அதிக அக்கறை செலுத்தும் கடப்பாடு இருக்கின்றது.ஏனெனில் அவர்களுக்கு அகதிகள் தொடர்பாக நல்ல பரிச்சயம் இருக்கிறது.அது மட்டுமல்ல அவர்களது உறுப்பினர்கள் பலர் அகதிகளாக வாழ்வது அவர்களுக்குத் தெரியும்.

நாடு திரும்பும் அகதிகள் தமிழகத்தில் பிறந்த தங்களது குழந்தைகக்கான,இலங்கை பிறப்புச்சான்று மற்றும் இலங்கை குடியுருமைச்சான்று என்பனவற்றை சென்னையில் உள்ள இலங்கைத்துணைத்தூதரகத்தில் பெறவேண்டும்.அத்துடன் இந்தியாவில் கல்வி கற்றவர்கள் தங்களது 10ம்வகுப்பு,மற்றும் 12ம்வகுப்பு சான்று களில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அயல்நாட்டினர் பிரிவில் சிவப்பு முத்திரை பதிப்பதுடன் நுங்கம்பாக்த்தில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்திலும் ஒரு சீல் அடிக்க வேண்டும், என்பது விதியாக உள்ளது.தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் இதனைச் செய்யாத இடத்து அவர்களுக்கு 21 வயது நிரம்பிவிட்டால் அதற்கு தண்டனைப்பணம் கட்டியே இவற்றைப் பெறமுடியும்.
பட்டப்படிப்பினை இந்தியாவில் முடித்தவர்கள் தங்களது சான்றினை இலங்கையில் உள்ள பல்கலைக்கழக ஆணைக்குழுவில் சமவலு சான்று பெறவேண்டும்..முகாம்களில் பட்டப்படிப்பை முடித்த பலபேர் இருக்கின்ற போதும் அவர்களது படிப்பிற்குரிய வேலை தமிழகத்தில் கிடைப்பதில்லை.பட்டப்படிப்பை முடித்த பலர் கூலிவேலைக்கு குறிப்பாக பெயின்ரிங் வேலைக்குச் செல்லும் நிலைமைகளே காணப்படுகிறது.இப்படியானவர்கள் நாடு திரும்பும் பட்சத்தில் அவர்களது படிப்பிற்குரிய வேலையும்,அங்கீகாரமும் இலங்கையில் கிடைக்கும் தமிழகத்தில் பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பிய பலர் அவர்களது படிப்பிற்கு ஏற்ற வேலையினை இலங்கையில் செய்து வருவதை அறியமுடிகிறது.
நாடு திரும்பல் என்பது தற்போது சுயமாக சிறிய எண்ணிக்கையுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதனை ஊகக்படுத்தி பெருமளவில் செய்ய வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் உரியதாகும்.