திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பாதுகாப்பு கருதி இடம் புலம்பெயருதல் என்று ஆரம்பமான திரைகடல் ஓடியும் பாதுகாப்பு தேடு என்பதற்குள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு ஏன்பதுவம் இணைந்து கொண்டது உண்மை நிலை.

பாதுகாப்பு காரணங்களுக்கு மேற்குல நாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்களுக்குள் பொருளாதாரக் காரணங்களுக்காக தாயகத்தில் பொருளாதார அடித்தளங்களை உடையவர்கள் புலம்பெயர்ந்தாக உருவான மேற்குலக குடியேற்ற வாழ்வு

இதற்கு முன்பு 1970 களில் மேலதிக இல்லது இலங்கையில் வாய்பில்லாத கல்வியைப் பெறுவதற்காக அதிலும் சிறப்பாக இலங்கையில் உயர்கல்வியை பெறுவதற்குரிய பல்கலைக் கழக அனுமதி பெறமுடியாதவர்கள் அக்கவுன்டனாக தம்மை மாற்றிக் கொள்ளவும் எஞ்சினியர் கனவிலும் அதிகம் பிரித்தானியாவிற்கு மேற்படிப்பு என்ற கோபாவில் இணைதவர்கள்கள் மிகச் சிலரே. இதில் தாயகத்தில் உயர் வகுப்புகளில் தமது படிப்பின் மீத அதிகம் கவனம் செலுத்தாது சாக்கு போககு காட்டியவர்கள் அதிகம் அடங்குவர்.

இது கிராமத்திற்கு ஒன்று இரண்டு என்ற எண்ணிக்கையிற்குள் குறுகியதாக மேற்குல இடம்பெயர்வுகள் மட்டுப்படுதப்பட்டு இருந்தன.

மாணவ வாழ்கையில் சீரிய செயற்பாடுகளை நிறுவ முற்படாதவர்களும் சமுயதாயத்தில் படிக்காதவன் படிப்பு ஏறாதவன் பல்கலைக் கழகம் போக முயற்சிக்காதவன் முடியாதவன் என் பெயர்களை தம்மிடம் இருந்து அழிப்பதற்கும் அக்கவுன்டன்சி செய்ய லண்டன் போகப் போகின்றேன் என்று லண்டன் மாப்பிள்ளையாக மாறியவர்களை கிராமங்களில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டிய கால கட்டம் அது.

இந்த கண்ணாடிக் கனவுகளில் தம்மை இணைத்தவர்கள் தொலைத்தவர்களில் சிலரும் தேறியதும் உண்மை. பாசை புரியாத…? ஊரில் புரியாத பாசையில் ஆரம்பித் கல்வி அறையிற்குள் அடைந்திருந்து படித்தாக வேண்டும் சீதொஷண நிலமைகளும் அப்படி…

கூடவே ஒழுங்காக கல்விக் கூடங்களுக்கு சென்றால் பட்டத்தை பெறலாம் என்ற போட்டிப் பரீட்சை அற்ற மேற்குல கல்வி முறையும் அவர்களை எந்திரவியலாளராகவும் கணக்காளராகவும் ஆக்கியும் ஆக்காமலும் அது சார்ந்த வேலைகளில் துறைசார் நிபுணத்தும் அற்ற வேலையாட்களாகவும் அவர்கள் தம்மை மேற்குலகில் இணைத்துக் கொண்டார்களா. ரூபாயை விட பல மடங்கு பெறுமதி மிக்க ஸ்ரேலின் பவுன் இல் பணத்தையும் சேர்த்துக் கொண்டனர்.

சேர்த்த பவுனை வைத்து தனது மகன் எஞ்சியர் கணக்காளர் என்று ஊரில் கொழுத் சீதனத்துடன் பொம்புழை எடுத்த லண்டன் மாப்பிள்iளாக மாறியவர்கள் பலர். பின்பு குடும்பம் லண்டன் வந்த பின்புதான் தெரிந்தது மாப்பிளை என்ன வேலை செய்கின்றார் என்று.

சரி வந்தாச்சு வாழத் தொடங்குவோம் தாம் நம்பிய மினுங்கங்களின் உண்மையை ஊரில் உள்ள உறவுகளுக்கு போட்டுடைத்த வரலாறுகள் மிகக்குறைவு.

இதற்கும் அப்பால் கல்வியைப் பெற்று தாயகம் திரும்பி நாட்டில் சிறந்து உத்தியோகத்தராகவும் லண்டனில் துறைசார் வேலையாளர்களகவும் மிளர்ந்தவர்கள் என்று இருந்துதம் உண்மைதான். இதில் தாயகம் திரும்பிய பலர்தான் தமக்கான துறைசார் நிபுணத்துவதிற்கு அத்தாட்சியைக் கொண்டிருந்தவர்களாக அதிகம் இருந்தனர்.

இவையெல்லாம் ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெறுவதற்கு முன்னரான கால கட்ட நிலமைகள்.
எனது வகுப்பு பௌதிக ஆசிரியர் கூறுவார் இங்கு ஏஎல் படித்து பல்கலைக் கழகம் போவதற்கு முடியாதவன் அதற்கான பெறு பேறுகளை பெறமுடியாதவன் எப்படி லண்டனுக்கு போய் மட்டும் அக்கவுன்டனாவும் எஞ்சியனராகவும் வரமுடியும் என்பார்.

இங்கு(யாழ்ப்பாணத்தில்) உழாத மாடு எப்படி வன்னியில் உழும் என்று யாழ்ப்பாணத்து கிராமத்தவர் கதைப்பதைப் போல்.
இந்த திரை கடல் ஓடியும் திரவியம் தேடு தமிழர்களுக்கு உயர்கல்வியில் அதிகம் பாகுபாடுகளை காண்பித்து மறுப்பாக வெளிவரத் தொடங்கிய 1970 களில் அதிகம் ஆரம்பித்து இருந்தாலும் 1983 களின் பின்னரான சூழல் இதனை வேகப்படுத்தியது.

மத்திய கிழக்கில் சில வருட கொந்தராத்துகள் அதிக பணங்களை வழங்காது இடையில் நிற்கும் தரகர்களால் விழுங்கி ஏப்பம் விடப்பட்ட சூழலும் கப்பல் சிப்பந்தியாக கடலில் தத்தளித்த வாழ்க்கை விமானங்களில் சரக்குகளை அதிகம் அனுப்பலாம் என்று நலிந்து போனபோது ஏற்பட்ட வேலை வாய்புக் குறைப்புகளும்.

அகதிகளால் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பொருளாதார அகதிகளை பாதுகாப்பு காரணகாரிய அகதிகளாக மேற்குலகிற்குள் புக வைத்தன.

மேற்குலகிற்கும் தமது காலனி ஆதிக்கத்தில் அந்தந்த நாடுகளில் செய்த உழைப்பு சுரண்டலை தமது நாட்டிற்கு ஆளணிகளை வரவழைத்து அதிலும் சிறப்பாக அகதிகளாக மனித உழைப்பை சுரண்டும் பொறிமுறைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

இதில் மேற்குலகு மிக முக்கியமான சௌகரியத்தையும் தனதாக்கிக் கொண்டது. அது தமக்கு எதிராக குரல் எழுப்பாத உழைப்பாளிகளை தமக்குள் அகதிகளாக உள்வாங்கி கொண்டு ஐ.நா. அகதிகள் பாதுகாப்பு சபையிலும் மனதாபிமான செயற்பாடுகளைச் செய்யும் நல்லவர்கள் என்ற பெயரையும் பொறித்துக் கொண்டன.

இது கால ஓட்டத்தில் நினைத்த மாத்திரத்தில் இருக்கும் சிறு நிலத்தை சேமிப்பை அல்லது நகையை விற்று மேற்குலகம் போதல் என்பதற்கு அப்பால் கோடி கொடுத்தாலும் போவது கஷ்டம் அதுவும் போய் சேர்ந்தாலும் அவர்கள் அரவணைக்கமாட்டார்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்பதை அதிகம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பித்து வட அமெரிகாவரையிலும் அளவு குறைவாக இருந்தாலும் பரிணாமம் பெற்றது என்னமோ அண்மைய உண்மைகள்.

இந்த வெளி நாடு அனுப்புதல் என்பதற்குள் இலட்சங்களாக பணத்தை புரட்டும் ‘இலட்சியவாதி’ முகவர்கள் ஆயிரம் ஆயிரமாக எங்கும் வியாபித்தும் கொண்டனர்.

அதனால் டாலரில் உழைத்து ரூபாயில் செலவழிக்கும் மினுக்கங்களில் விட்டில் பூச்சிகளாக விழுபவர்களின் தொகையில் இழுத்த இழுப்பில் மாத்திரம் மாற்றம் ஏற்படவில்லை.

புலம் பெயர் தேசத்தில் மீன் வெட்டுதல் கச்கூசு கழுவுதல் தொழிற் சாவைலகளில் கூலியாக வேலை செய்தல் டாக்சி ட்வைர் சமையர்காரர் என்று எல்லாத் தொழிலையும் இரவு பகல் பனி குளிர் என்று பாராமல் வேலை செய்துதான் உழைக்கின்றோம் என்பதை விட நாம் இல்லாவிட்டால் அரசே ஸ்தம்பித்துவிடும் என்று அளவிற்கு பவுசுகாட்டியதும் இதனால் உருவான டாலர்கள் தாயகத்தில் பவுசாக பார்க்கப்படுவதே யதாரத்தம்.

மேற்குல வாழ்க்கையில் எத்தனை பேர் திருமணம் என்ற பேச்சு வந்த போது பொண்ணு வீட்டிற்கு நான் வாச்சராக வேலை செய்கின்றேன் என்பதை அதே சொற் பதத்தில் சொல்லி இருக்கின்றோம்….?

வேலைகளில் பாகுபாடும் அதுசார்ந்து சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் முழுமையாக எதிர்பவனாகவும் எல்லா வேலைகளையும் வெவ்வேறு காலகட்டங்களில் செய்தவன் இனியும் வாய்ப்புக்கள் ஏற்பட்டால் செய்வேன் என்ற அடிப்படியில்….

உண்மைகளை மறுத்து யதார்த்தங்களை கூறாமல் ஒரு மாய வாழ்கை வாழ்ந்து இதற்குள் மேலும் பல தாயகத்து இளைஞர்களை விட்டில் பூச்சிகளா வீழ்த்தக் கூடாது என்பதற்காக உண்மைகளை எடுத்துiகை; முற்படுகின்றேன்.

நாம் ஊரில் உள்ள உறவுகள் நட்புகள் ஏனையவர்களை படிப்பதற்காக புலம் பெயர் தேசத்திற்கு வாருங்கள் என்று அவர்களை அழைப்பதாக அல்லது தாமாக செல்வதற்கான அறிவூட்டல்களை செய்திருக்கின்றோம்…?
மாறாக காசு மரத்தில் ஏறிப் காசு புடுங்கலாம் என்றதாக அதிக எதிர்பார்ப்புகளை காட்டிய நிகழ்வுகளே அதிகம். எமது பிள்ளைகளாக இங்கு பிறந்தவர்கள் பல்கலைக் கழகம் வந்து படித்ததுதற்கு அப்பால் இதற்கு முந்தைய தலைமுறையில் பலரும் தமது கல்வி அறிவை வளர்பதில் அதிக நாட்டம் காட்டவில்லை.

இதற்கு அவர்கள் இங்கு வந்து இறங்கும் போது அவர்களுக்கு ஏற்பட்;ட பொருளாதார சுமையும் கடமைகளும் காரணமாக கூறுவதில் சில உண்மைகள் இருந்தாலும் இதில் நாம் தவற விட்டவைகளை ஏற்றாக வேண்டும்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மேற்குலகிற்கு இந்திய மாணவர்கள் போல் படிப்பிற்கான முறையாக அனுமதி பெற்று வந்து பின்பு படிப்பை முடித்து அது சார்ந்து வேலையில் ஈடுபட்டு இதன் அடிப்படையில் விருப்பம் ஏற்படின் சில காலத்தில் அந்தந்த நாட்டுப் பிரஜைகளாக மாறுங்கள் என்பதற்கான அறிவுரைகள் வழிகளை காட்டியுள்ளோமா என்றால் பொதுவில்லை இல்லை என்றுதான் கூற வேண்டும்.

மாணவராக மேற்குலகிற்கு வருதற்கான அனுமதி இலங்கை மாணவர்களுக் இந்திய மாணவர்களை விட குறைவாக இருப்பதற்கு ஒரு காரணமும் உண்டு. இங்கு மாணவனாக வரும் இந்திய மாணவன் நூறு விழுக்காடுவரையிலானவர்கள் கல்வியை தொடர்ந்து முடித்த பின்பே தனது இருப்பிடம் எங்கு என்பதை தீர்மானிக்க குடியுரிமை என்பதை தீர்மானிக்கின்றார்.

ஆனால் இலங்கையன் ஒருவன் இங்கு வந்து இறங்கிய மறுகணமே தான் மாணவன் என்பதை மறந்து அகதிக்கான கை உயர்த்தல்களை செய்கின்றான் அதனால் மேற்குல அரசுகளும் மாணவ விசா என்பது இலங்கையன் ஒருவன் அகதியாக தன்னை இணைத்துக் கொள்வதற்கான தந்திரோபாயமாக பார்கின்றது.

இதில் சில நாடுகள் சில தளர்வுகளை கொடுத்தாலும் மாணவ காலம் முடிந்த பின்பு வலுக் கட்டாயமாக திருப்பி அனுப்பப்படுகின்றனர் இந்தியன் அதனை மனமுவந்து ஏற்றாலும் இலங்கையர் அதனை பெரும்பாலும் ஏற்பதில்லை இதற்கு நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற நிலமை முக்கிய காரணமாக 2009 வரை அதிகம் இருந்தாலும்

அண்மை காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் அதிகம் ஏற்பட்ட வீழ்ச்சி அதனை பொருளாதாரக் காரணங்களுக்காக மேற்குலகில் தங்கிவிடுதல் என்பதில் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி ஏதோ தற்போதுதான் தற்செயலாக ஏற்பட்டது அல்ல இது நீண்ட கால செயறபாட்டின் தொடர்ச்சிதான் இதன் தாக்கங்கள் இன்று பல நாடுகளிலும் எற்பட்டு இருக்கின்றது ஏன் இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கின்றது ஏன் பலரும் இடம்பெயர்ந்து வாழும் வாழ விரும்பும் மேற்கத்திய நாடுகளிலும் ஏற்படுகின்றது.

இந்த மேற்குலக நாடுகள் வளர்முக நாடுகளை சுரண்டி வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறியதினால் இன்னும் சில காலத்திற்கு மூன்றாம் உலக நாடுகளை விட தாக்குப் பிடிக்கலாம் என்று காலத்தை ஓட்டுகின்றனர்.
பண வீக்கம் பொருட்களின் வலை உயர்வு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மூலதனம் மேலும் மேலும் ஓரிடத்தில் குவிதல் என்பது மேற்குலகில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில் கோடிகணக்காக கொடுத்தால்தான் கனடா அவுஸ்திலேலியா ஐரோப்பா போகலாம் என்ற நிலையில்… வெறும் இலட்சங்களை கொடுத்தால் போகலாம் என்று வத்தையில் ஏறிய புத்தியற்ற செயற்பாடுகள் மக்கள் மீதான பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது. அதனை விட நடுக்கடலில் தத்தளிக்விட்டு நீருக்குள் அழித்தி கொல்லும் இந்த கொலைகார முகவர்களைத் தேடி அலையவும் வைத்திருக்கின்றது.

முதலில் இந்தியாவிற்கு அகதிகளாக வெறும் 45 நிமிட பணயத்தில் போவதில் இருக்கும் கடல் ஆபத்தையும் நயினாதீவிற்கு கடலிப் பயணமாகும் போது இருக்கும் ஆபத்தையும் புரிந்து கொண்டவரகள் நாம்.
இந் நிலையில் சமுத்திரங்களை கடந்து 100 மேற்பட்ட நாட்கள் பயணித்து அதுவும் மனித உடல் தாங்க முடியாத குளிர் பிரதேசத்துக் கடலில் நாட்டிற்கு பயணமாதல் என்பது தம்மை தாமே அழித்துக் கொள்வதற்கு சமம் என்ற பொதுப் புத்தியை பாவிக்காத இதனைத் தடுத்த நிறுத்தாக தெளிவுபடுத்தாத அரசியல், சமூகவியல் செயற்பாட்டாளர்கள் தலமைகளும் பிரதான ஊடகங்களும் எமது தாயகத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றனர்

உசுப்பேத்தி… உசுப்பேத்தி… தாங்கள் மட்டும் தலைநகர் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்று வீடு வளவும் வாகனமும் செல்போனும் வைத்துக் கொண்டு இங்கு இருக்க முடியாது என்று நாட்டை விட்டு ஓடுங்கள் அதுதான் சரி என்பதாக தமது தேர்தல் உசுப்பேதல் பேச்சுகளும் தொலைக் காட்சி விவாதங்களை செய்து கொண்டிருக்கின்றனர் பிரதான நீரொட்டத்தில் உள்ள அரசியல் தமிழ்த் தலமைகள்.

இதனை தமக்கு சாதகம் ஆக்கும் கள்ளர் கூட்டம் எப்போது எல்லோரையும் விட அதிகமாக ஏஜன்சி என்ற பெயரில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அவர்களின் வலையில் வீழ்ந்தவர்கள் தற்போதை 300 அல்ல. கணக்கிற்குள் வராத ஆயிரங்கள் இன்னமும் காணாதவர் பட்டியலிலில் இருக்கிறனர்.
கடலால் அனுப்பி காணாமல் போனவர்களுக்கான ஒரு அமைப்பு அமைத்து போராட வேண்டி நிலமை 2009 இற்கு முன்பிருந்தே ஆயிரங்களை தாண்டி விட்டது. என் பிள்ளை எங்கோ ஒரு தீவில் இன்னும் உயிருடன் இருக்கின்றான் என்றோ ஒரு நாள் வருவான் டாலர் அனுப்புவான் என்று கண்ணீருடன் தாய் ஒரு இடமும் தந்தை இன்னொரு இடமுமாக இருக்கும் பல பெற்றோர்களை நாம் அறிவோம்.

இதனை விட போகும் இடம் தெலைல தூரம் இடையில் தங்கிப் போகலாம் என்று தங்கிய நாடுகளில் இனிமேல் இதுதான் வாழ்க்கை என்று தங்கிவிட்டு தொடர்புளை துண்டித்து அந்த நாட்டுவாசிகளா மாறிய இலங்கை தமிழர்கள் அதிகம். இந்த வகையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வாழும் ஒரு இனமாக இலங்கை தமிழர் ஆகியிருக்கின்றனர் இன்று.

இந்த வத்தையில் ஏற்றி பெரும் சமுத்திரங்களை கடந்து ‘டாலர்’ சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றோம் என்று நடுக்கடலில் தத்தளித்து கொல்லுவதற்கான ஏற்பாடுகளை செய்த ஏஜன்டுகள் கல்லால் எறிந்து அழிக்கப்பட வேண்டியவர்கள்.

இந்த ஏஜன்டுகள் ஒரு தடவையில் இலட்சங்ககை பலரிடம் வாங்கி கோடீஸ்வரர் ஆகும் கனவுகள் நனவாகி இருக்கலாம் ஆனால் கல்லால் எறிந்து இவர்களை இல்லாமல் செய்து இவர்களின் தொடர்ச்சிகளை நாம் நிறுத்தியாக வேண்டும்.

நாட்டில் நாம் தங்கியிருந்து எமது குடிசனப் பரம்பலையும் அதிகரித்து பலமான சமூகமாக நாம் பரிணாமம் பெற வேண்டும் என்பவும் இதற்குள் என் கருதுகோளாகவும் இருக்கின்றது. இதற்கான முன் உதாரணங்களாக பலரை என்னால் சுட்டிக்காட்டவும் முடியும்.