இலங்கையின் பொருளாதாரநோயைசமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 5

(அ. வரதராஜா பெருமாள்)

உலகவிலைஉயர்வாலேயே ஏற்றுமதிவருமானஅதிகரிப்பு

  1. கடந்தசிலமாதங்களாகஏற்றுமதிவருமானங்கள் அதிகரித்திருப்பதாகஅரசஅறிக்கைகள் அடிக்கடிதெரிவிக்கின்றன. இதனுடையஅர்த்தம் ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்கள் தொகைரீதியில் குறிப்பிடத்தக்கஅளவுக்குஅதிகரித்திருக்கின்றனஎன்பதல்ல. ரஸ்ய –உக்ரைன் யுத்தத்தின் காரணமாகவும் அதனையொட்டி ரஸ்யாவின் சர்வதேசவர்த்தகத்துக்குஎதிராகஅமெரிக்கவிதித்துள்ளபொருளாதாரதடையினாலும் பொதுவாகவேஉலகசந்தையில் பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இலங்கையின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் அமெரிக்கா,ஐரோப்பியநாடுகள்,பிரித்தானியாமற்றும் கனடாஆகியநாடுகளுக்கேசெல்கிறது. இந்தநாடுகள் அனைத்திலும் ஏறத்தாழஅனைத்துவகைப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தநிலையில் இலங்கைஏற்றுமதிசெய்யும் பொருட்களினதுவிலைகளும் கணிசமாகஅதிகரித்திருக்கின்றன.