பற்குணம் (பகுதி 104 )

பற்குணம் மாகாண சபையில் பணியாற்றியதால் சில நேரங்களில் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் என்னை அறிந்திருந்தார்கள்.சில நேரங்களில் என்னை சந்திப்பது வழக்கம்.இவர்கள் புலிகள் மீதான பயம் காரணமாக மாகாண சபையில் பணிபுரிவதாக சொல்வதில்லை. யூ.சி இல் வேலை செய்வதாகவே கூறுவார்கள்.மேலும் சிறு ஊழல் மோசடிகளும் செய்தார்கள்.கொழும்பு வந்தால், வந்த வேலையை உடனே முடிக்க விரும்புவதில்லை .லொட்ஜ் வாடகை,வாகன தரிப்பிட வாடகை என பற்றுசீட்டுகளை வாங்கி மாகாண சபையில் பணம் வசூலிப்பார்கள்.

இதுபற்றி பற்குணத்திடம் சொன்னேன்.அவர் சொன்னார் இன்னமும் சரியான நிர்வாகம் அமையவில்லை.பலர் மாகாணசபையில் இணையத் தயங்கும்வேளையில் தூய நிர்வாகத்தை அமுல்படுத்துவது மாகாண சபையை செயலற்றதாக்கும்.எனவே கால அவகாசம் தேவை.இந்த மாகாண சபையில் அதிகமானோர் இடதுசாரி தத்துவத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்.அவர்கள் இலகுவில் மாறமாட்டார்கள் .பொறுமையாக இருப்போம் என்றார்.

சில நாட்களின் பின் சிலர் சமையல் வாயு கொள்வனவு செய்ய சிலரை பற்குணம் அனுப்பியிருந்தார் .ஆனால் அவர்கள் இளைஞர்களாகவும் ஏராளமான சிலிண்டர் வாயு கொள்வனவு செய்ய வந்ததால் அவர்களுக்கு அந்த நிறுவனம் அதைக் கொடுக்கவில்லை .இதை அவர்கள் பற்குணத்துக்கு அறிவித்தனர்.ஆனால் பற்குணம் நான் சொன்ன கதைகளை வைத்து சிலவேளை அவர்கள் பொய் சொல்லலாம் என கருதி எனக்கு விசயத்தை சொன்னார்.என்னை விசாரிக்கும்படி கூறினார்.

அதன்பின்னர் நான் தனியாகவே அங்கே சென்று காஸ் கிடைக்குமா எனக் கேட்டேன். அவர்கள் தரலாம் என்றனர்.அதன் பின்னர் மாகாண சபை ஊழியர்களின் விசயத்தை கூறிக் கேட்டேன் .அதன் பின்னர் அவர்கள் மாகாண சபை ஊழியர்கள்தான்.நீங்கள் தாராளமாக வழங்கலாம் என்றேன்.அத்தோடு பற்குணம்,முதலமைச்சர் ஆகியோர் தொலைபேசி இலக்கங்கள் என்னிடம் இருந்தன. அதை தரவா எனக் கேட்க வேண்டாம் எனக் கூறி வாயு சிலிண்டர்களை வழங்க ஒத்துக் கொண்டனர்.

மற்றவர்கள் ஊழல்களை கண்டு கொள்ளாவிட்டாலும் தனக்கு கீழே உள்ளவர்களை கவனித்துக்கொண்டிருந்தார்.அதன் பின் அந்த நிறுவனத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று வாயு சிலிண்டர்களை பெற்றுக் கொடுத்தேன்.

இக்காலத்தில் எனக்கும் வெளிநாடு செல்லும் எண்ணம் துளிர்விட்டது.பற்குணத்தின் மருமகன் பெறாமகன் ஆகியோர் எனக்கு உதவ முன்வந்தனர்.ஆனால் பற்குணம் எனக்கான திருமண ஏற்பாட்டில் இறங்கினார்.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)