பெரிய கோடு சிறிய கோடு! சிறு மதியர் செயல்?

பீர்பாலிடம் அரசியல் குறித்து உரையாடிக் கொண்டிருந்த அக்பர் திடீரென்று எழுந்து வந்து மண் தரையில் ஒரு நீண்ட கோடு போட்டார். அமைச்சர்கள் அனைவரையும் கூப்பிட்டார்.

 

அமைச்சர் பெருமக்களேஇதோ தரையில் ஒருகோடு போட்டிருக்கிறேன். இந்தக் கோட்டை சிறியதாக்க வேண்டும். ஆனால் இந்தக் கோட்டை அழிக்க கூடாது. இதுதான் நிபந்தனைஎன்றார் அரசர். அமைச்சர்கள் கோட்டை உற்றுப் பார்த்தார்கள்.

கோட்டை அழிக்காமல் எப்படி சிறியதாக்க முடியும் என்று குழம்பினார்கள்.

பீர்பால் எழுந்து வந்தார். அக்பர் கிழித்த கோட்டுக்குப் பக்கத்தில் அந்தக் கோட்டைவிட பெரியகோடு ஒன்றைக் கிழித்தார்.

அரசே உங்கள் நிபந்தனையின்படி நீங்கள் கிழித்தக் கோட்டை நான் அழிக்கவில்லை. நீங்கள் போட்டிருந்த கோடு சிறிதாகி விட்டது. உங்கள் கோட்டுக்கு பக்கத்தில் அதைவிட பெரிய அளவில் ஒரு கோடு போட்டபடியால் நீங்கள் கிழித்த கோடு சிறியதாகி விட்டதுஎன்றார் பீர்பால்.

அமைச்சர்கள் பீர்பாலின் திறமையை நினைத்து மலைத்துப் போனார்கள். அக்பர் பீர்பாலின் புத்தி சாதுர்யத்தைப் போற்றிப் புகழ்ந்தார்.

எம் தேசத்தில் இருந்த கூட்டமைப்புகளை உடைத்து புதிய கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளூர் ஆட்சி தேர்தலில் களம் காண பல பீர்பால்கள் புதிய கோடுகளை போடுகிறார்கள்.

‘‘அது எப்பவோ முடிந்த காரியம்’’ – யோகர் சுவாமிகள் –

( ராம்)