யார் தலைவன்….

(Paul Prahalathan )
கல்லுடைக்கும் தொழிலாளிகளோடு ஒன்றாக வாழ்ந்தவன். தானும் அதே தொழிலை அவர்களோடு செய்தவன். காலாற நடந்தவன். தோழர்களோடு தோழனாக வாழ்ந்தவன். பட்டி தொட்டி எங்கும் இடதுசாரிய முற்போக்காளர்களை தேடிக்கண்டு தோழமை அரசியல் புரிந்தவன். பதவி ஆசை இல்லாதவன். கட்சி சொத்துக்கு ஆசை கொள்ளாதவன். கொண்ட கொள்கையில் பிடிவாதம் உள்ளவன். எதற்காகவும் எவருக்காகவும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவன்.

மக்கள் நலனுக்காகவே எதிரிகளால் கொல்லப்பட்டவன். அந்த நாபா தோழர் எம் தலைவன் எங்கே! அந்த தலைவனையே கொன்ற மக்கள் விரோத எதிரிகளோடு காய் கோர்த்த சுரேஷ் எங்கே! நாபாவின் பெயரை பயன்படுத்த கொஞ்சம் தகுதியும் வேண்டும். தனது இருப்புக்காக யாரோடும் எவரோடும் எந்த அரசியல் பிசாசோடும் அவ்வப்போது இணைந்து விபச்சார அரசியல் நடத்தும் சுரேஷ் நாபாவின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாதவர். புலிகள் தோழர் நாபாவை கொன்றார்கள். அதே புலிகளோடு இவர் உள்வீட்டு பிள்ளையாய் உறவாடினார்.

இதை யாராவது சாணக்கியம் என்று சொன்னால் அவர்களை விட புண்ணாக்கு முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. அதைத்தான் பலர் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். திலீபனால் கொல்லப்பட்ட டெலோ தோழர்கள் பலர். EPRLF தோழர்கள் பலர். அதே கொலையாளிக்கு இவர் மாலை போடுகிறார். அப்போ இவர் எதிரியா தோழரா? இவர்தான் மக்களுக்காக எதோ செய்யப்போகிறாராம்!!! பண்ணிட்டாலும்?? த தே கூ வை விட்டு இவர் பிரிந்து நின்று மண்ணாங்கட்டியாக போகப்போகிறார். பார்த்துக்குங்க!