வித்தியாவின் படுகொலைத் தீர்ப்பும்….. அமைச்சரின் இராஜினாவும்…..

(Saakaran)வித்தியாவின் படுகொலைக்கான தீர்ப்பு நீதித்துறை மீது சில மரியாதை எற்படுத்தியிருக்கின்றது. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்குள் இதற்கான தீர்ப்பு வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. நீதிமன்றத் தீர்ப்பில்; பெண் அமைச்சர் ஒருவர் குற்றவாளி(கள்) தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் இதனைக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது. கூடவே மக்களின் தாக்குதலில் இருந்து கற்றவாளிகளைக் காப்பாற்றியதற்பு பாராட்டும் தெரிவித்திருந்தது. ஒரு முதன்மை கொலைக் குற்றவாளி தப்புவதற்கு உடந்தையாக இருந்தது என்பதை வெறும் கண்டனத்துடன் நிறுத்தியிருப்பது இலங்கையில் இன்னமும் அரசியல்வாதிகள் சட்டத்திலிருந்து விலத்திப் பார்க்கும் வெளிப்பாட்டை காட்டி நிற்கின்றது. இதில் நீதிபதிகளும் சுதந்திரமாக? செயற்பட முடியாத நிலமை இருப்பதை எடுத்துக் காட்டியும் இருக்கின்றது. இந்நிலையில் குற்றவாளியாக இருக்கும் அமைச்சர் சுயமாக தனது பதவிகளை இராஜினாமா செய்வதே அறம் சார்ந்த செயற்பாடாக இருக்க முடியும். இதனை அமைச்சர் செய்வார் என எதிர்பார்ப்போம் அன்றேல் மக்கள் திரண்டு இவரின் இராஜினாமை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவும் சாத்தியம் இல்லையெனில் இனிவரும் காலங்களில் இவரின் தேர்தல் வெற்றியை நிராசை ஆக்க வேண்டும். வித்தியாவின் படுகொலைகள் சமூகமாக இணைந்து நாம் பாதுகாப்பை வழங்குவதன் மூலமே தடுத்து நிறுத்த முடியும். எனவே மக்கள் சமூகமாக இணையவேண்டி தேவைகள் முன் எப்போதையும் விட தற்போது அதிகமாக ஏற்பட்டுள்ளது.