ஹக்கீமிடம் பணம் வாங்கியவர்களுக்கே குமாரிக்கு நேர்ந்த அநியாயம் குப்பை, பழைய கதை

(தமிழ் மிரர் பத்திரிகை ஆசிரியரின் தான்தோன்றித்தனமான அசிங்க தலையங்கத்துக்கு பதில்)

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும், தூய முஸ்லிம்  காங்கிரஸ்செயற்பாட்டளருமான பஷீர் சேகுதாவூத் அவரின் பேஸ்புக்கில்”இறைவன் நாடிவிட்டான்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒருபதிவைஆதராமாக கொண்டு தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியரான நீங்கள் உங்களது பத்திரிகையில் அவரை தாக்க வேண்டும் என்ற ஒரேநோக்கத்தில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கிறீர்கள்.

பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை மிகப் பெருபாலானோர் வாசிப்பதில்லையாயினும் அதுவே அப்பத்திரிகையின்கொள்கையையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. இந்த ஆசிரியர் தலையங்கப் பகுதியில் , பஷீர்சேகுதாவூத்தின்  பேஸ்புக் பதிவு குறித்து நீங்கள் எழுதியுள்ள விடயங்களின் மூலம், பத்திரிகை தர்மத்தை கொச்சைப்படுத்திமீறியுள்ளதுடன், இஸ்லாம் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாமல் எமது மத உணர்வுகளையும் கொச்சைப்படுத்தியுள்ளீகள்.

இதனூடாக அவரை திட்டித் தீர்க்கும் கேவலமானதும் அசிங்கமானதுமான ஒரு பணியை யாருக்கவோ நீங்கள் செய்திருக்கிறீர்கள். முகநூலில்  பஷீரினால் பதிவிடப்பட்ட ஒரு பழைய கதையை (உங்கள் கருத்துப்படி) தூக்கிப் பிடித்து பஷீரை உங்கள் ஆசிரியர் தலையங்கத்தில் தாக்குவது உங்களது ஊடக  தர்மம் என்றால் அல்லது இதுதான் இப்போதுள்ள “ புதிய நியமம் “ என்று நீங்கள்கருதுவதாக இருந்தால், இதற்கு முன்பு இதே விவகாரம்  தொடர்பில் பலரும் பேஸ்புக்கில் எழுதியபோது எங்கே போயிருந்தது “ உங்கள் கத்துக்குட்டி ஊடக தர்மம் “ புனித இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் அரசியல் தலைமைகளின் கீழ் தரச்செயல்களைவெளியுலக்குக் காட்டி  பஷீர் “புனிதன்”என்ற போர்வைக்குள் புகுந்து கொள்ளமுனைவதாகவும் ரவூப் ஹக்கீம் – குமாரி தொடர்புஇலங்கை அரசியலில் பழைய கதை என்றும் , அந்த  கீழ்த்தரமான அசிங்கச் செயலை பஷீர் பகிரங்கப்படுத்தியிருப்பதாகவும், எடுத்தஎடுப்பிலே அவரைச் சாடியிருகிறீர்கள். பஷீர் தனது பேஸ்புக்கில் எழுதியதை” தன்னுடைய குப்பைகளை பேஸ்புக்கில்கொட்டியிருக்கிறார் “. என்று குறிப்பிட்டு அவர் மீதான வன்மமான காழ்ப்புணர்ச்சியை ஆசிரியராகிய நீங்கள் எழுதியிருப்பதுதான்மிகக் கீழ்த்தரமானதும், அசிங்கமானதுமான ஊடகச் செயலாக அமைந்திருக்கிறது. மேலும்  ஹக்கிமால்  மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு பஷீர் உடந்தையாக இருந்ததாகவும்,  அதனை மறந்து விட்டதாகவும், உடந்தையாக இருந்தசம்பவத்தை ஒரு “ பக்கா அரசியல்வாதியாய்” வெளியுலகுக்கு காட்டி தன்னை நியாயப்படுத்தி கொள்ள முயல்வதாகவும்குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

நீங்கள் உங்களது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியுள்ளபடி “ யார்  செய்த குற்றம் பெரிது” என்பதுதான் ஒரு விவாதப்பொருள், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததுதான் பாரிய குற்றம். பஷீரின் குற்ற ஒப்புதல் என்ற விடயமும், அதன் மூலமான உண்மைவெளிப்படுதலும் சமூகத்திலும், சட்டத்திலும் ஒரு குற்றப் பரிகாரமாக , இருப்பதை உங்கள் அறிவு ஏன் ஏற்க  மறுக்கிறது. “புனிதன்”என்ற போர்வைக்குள் புகுந்து கொள்ள பஷீருக்கு எந்த தேவையும் இல்லை. மக்கள் முன்னிலையில் தனது கடந்தகாலஅரசியற் தவறுகளை குறிப்பிட்டு பல தடவைகள் மன்னிப்பு கோரிய பின் அவர் ஹக்கீம் – குமாரி விவகாரத்தில்  ஏன் புனிதனாகஎன்ற போர்வைக்குள் புகுந்துக்கொள்ள வேண்டியிருகிறது?  இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு காரியத்தை ஒரு கட்சியின் தலைவன்செய்வதையும், செய்ததையும் எவ்வளவு காலத்துக்குதான் மூடி மறக்க வேண்டும்? குப்பை என்று ஒதுக்க வேண்டும் என்று நீங்கள்எதிர்ப்பார்க்கிறீர்கள், அசிங்கமான , செய்யப்பட்ட ஒரு குற்றச் செயலை சமூக நலன் கருதி உள்ளதை உள்ளபடியே (அப்ரூவராக) சொல்லும் போது அறிவீனம் உள்ளவர்களுக்கு அசிங்கமாகவும், காலம் கடந்த குப்பையாகவும்  தெரிவது தவிர்க்க முடியாததுதான். ரவூப் ஹக்கீம் – குமாரி தொடர்பும், அவரது மரணமும், மரணத்துக்கான பின்னணியும், குமாரியின்  பொலிஸ் முறைப்பாடும்உங்களுக்கு வேண்டுமானால் குப்பையாகவும், பழைய கதையாகவும். இன்னும் சொல்வதானால்  ஹக்கீமிடம் பணம்வாங்கியவர்களுக்கும் , அவர் குடும்பம் சார்பானவர்களுக்கும் மற்றும் சிலருக்கும் மட்டுமே அது ஒரு பழைய , மறந்து போகவேண்டிய கதை. விபச்சாரம் புனிதமானதும்; அதை ஒரு கட்சித் தலைவர் செய்திருப்பதை, அதுவும் அநியாயமகா மரணித்துப் போனஒரு அபலைப் பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையும், அது பற்றிய ஏனைய விடயங்களையும் பேஸ் புக்கில் போடுவதுமட்டும் அசிங்கமானது என்பது தானே உங்களது நியாயம். அதைத்தானே உங்களது ஆசிரியத்  தலையங்கம்வெளிக்காட்டியிருக்கிறது, மூடி மறைக்கப்பட்ட ஒரு பாதகம் அல்லது ஒரு குற்றச் செயல் என்றுமே நிரந்தரபழமையானதாகவும்,உலகுக்கு வெளிவாரத உண்மையாகவும் இருந்து விட வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் அவசியமும்இல்லை.காலத்துக்கு காலம் அவை ஏதோவொரு வகையில் வெளிவந்து, தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியானவிடயங்களில் பத்திரிகை முதலான தரமான ஊடகங்கள் பாரிய பங்களிப்பை செய்திருக்கின்றன. ஆனால் நீங்கள் தான் ஊடகவில்லன் என்ற போர்வைக்குள் ”அசிங்கம் குப்பை” என்றெல்லாம் உளறி எதையோ இடிப்பதாக நினைத்து காயைஇடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஒரு முற்போக்கு இளம் ஊடகவியலாளனாக கருதி வந்தவர்கள் மத்தியில்”இல்லை நான்அப்படியானவன் இல்லை”என்று உங்களது இச்செயல் மூலம் மறுத்துரைத்திருக்கிறீர்கள்; ஊடக தர்ம விரோதியாக காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். ஹக்கீம் – குமாரி விவகாரத்தில்  பஷீர் அதற்கு உடந்தையாக இருந்ததில்லை, விவகாரம் முற்றிய நிலையில்தான் அநாகரிகமானதும் இஸ்லாத்துக்கு புறம்பானதும்,மானிட நற்பண்புகளுக்கு எதிரானதும்,முஸ்லிம் சமூகத்துக்குபாதகமானதுமான அந்த செயற்பாடுகளில் இருந்து எமது முஸ்லிம் சமூகத்தையும்,கட்சியையும் காப்பாற்ற எடுத்த பலதரப்பட்டநடவடிக்கைகளின் ஓர் அங்கம்தான் மஹிந்த அரசுடனான ஓட்டுறவாக மாறியது.அதுவும் அவரது தனிப்பட்ட தீர்மானத்திலானதுஅல்ல என்பதை கட்சி உயர் பீடத்திலும்,மக்கள் மேடைகளிலும் பல தடவை அவர் மன்னிப்பு கோரியவராகதெளிவுபடுத்தியிருக்கிறார்,

இதனைக் கட்சியின் உயர் பீடத்தவர்களும்,ரவூப் ஹக்கீமூம் நன்கு அறிவர். இதனால்தான் அவர்கள் இன்னும் மௌனம் காத்து வருகிறார்கள். ரவூப் ஹக்கீம் ஒரு தனி மனிதனல்லன்,ஒரு கட்சின் தலைமை.எனவே அப்படிப்பட்டவர் செய்யும் அசிங்கங்களைசமூகம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.யாரேனும் ஒருவர் வெளிப்படுத்தித்தான் ஆகவேண்டும். அதுதான் இங்குசெய்யப்பட்டிருக்கிறது.தவிர முஸ்லிம் ஒருவரின் தவறுகளை மறைக்க வேண்டும் என்று குறிப்பிடுவது சமூகத்துக்கு பாதகமான, அவரின் விபச்சாரம்,மது அருந்துதல்,கொள்ளை,கொலை முதலானவற்றை  அல்ல என்பதை பிற மதத்தவரான நீங்கள்ஓரளவுக்காவது புரிந்து கொள்ள முயசிக்க வேண்டும், அதை விடுத்து மத அடிப்படையிலான எதிர்ப்பு நடவடிக்களை ஏனோ தானோபாணியில் விமர்சித்து ஆசிரியத் தலையங்கம் தீட்டுவது உங்களது தொழிலுக்கும்,அதன் கௌரவத்துக்கும் ஆரோக்கியமானதல்ல.

(எனவே தங்களின் பத்திரிகையில் வெளிவந்த  பேஸ் புக்கில் வெளிவந்த ஒரு பதிவை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியத்தலையங்கம் எழுதி பஷீரை சாடியுள்ள நீங்கள்,ஒரு உண்மையான பத்திரிகை தர்மத்தை மதிக்க விரும்பும் ஒருவராக இருந்தால்இந்த விளக்கத்தையும் தங்களுடைய பத்திரிகையில் பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன் )

(ஏ.ஆர்.முஹம்மது பாயிஸ்)