1986 மார்கழி 13: ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு புலிகள் தடை விதித்த நாள்!

(தோழர் மோகன்)
தனிநபர் தலைமைக்குப் பதிலாக கூட்டுத்தலைமை, இயக்கத்திற்குள் ஜனநாயகம், விமர்சனம், சுயவிமர்சனம் மூலம் பிணக்குகளுக்குத் தீர்வு காணுதல், சகோதரப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு, இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை, இனங்களுக்கிடையே ஐக்கியம், அமைப்புக்களுக்கும் தனி நபர்களுக்கும் பேசவும் எழுதவும் ஒன்றுகூடவும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பேணுதல், மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல், இயக்கங்களின் தவறான போக்குகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதித்தல் என்பவற்றை வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்ததுடன் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசிய, உழைக்கும் மக்களின், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பாட்டாளிவர்க்கத் தலைமையை கட்டியெழுப்ப முயன்ற ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு 13.12.1986 அன்று புலிகள் தடை விதித்தனர்.