27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மூலவர்கள் என்றால் அதில் நிச்சயமாக தோழர் ஐயாவிற்கும் தனி இடம் உண்டு. வாழ்நிலை கம்யூனிஸ்ட் என்று எம்மால் உணரப்படும் அளவிற்கு அடிமட்ட மக்களின் வேலைத்திட்டங்களில் தன்னை எப்போதும் இணைத்தவர் வன்னியின் காடு மேடு எல்லாம் இவருக்கு அத்துப்படி வாழ்வை இவர் அளவிற்கு ரசிப்பவர் வேறுயாராகவும் இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் அதனால்தான் மக்களின் விடுதலைக்காக ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலேயே கல்யாணத்தின் பின்பும் முழுநேர போராளியாக தன்னை இணைத்துக் கொண்டவர். இவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைவராக மக்களால் இனம்காணும் வகையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பின்நின்று வழிநடத்தியவர் மத்திய குழு உறுப்பினர் நடேசலிங்கம் அரசியல் செயற்பாடாளர் கனகலிங்கத்தின் மரணத்தின் பின்பு வன்னியை தனித்து தாங்கப் புறப்பட்டு றேகன் என்ற சர்வதேச பாசறை போராளியை இனம்காட்டியவர். மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியல் குடியேறிய மலையக மக்கள் மத்தியிலிருந்து வந்து தோழர்கள் விடுதலைக்காக செய்த அர்பணிப்கபுக்ள் அளப்பரியவை கூடவே முஸ்லீம்மக்கள் மத்தியிலும் அதிகளவு போராளிகளை உள்வாங்கிய செயற்பாடுகள் வவுனியா மாவட்டத்திலும் அதிகம் நடைபெற்றது. 1986 களில் சிறீலங்கா இராணுவத்துடனான சமரில் முதல்களப் பலி கண்ட வன்னி மகள் பானு. கருவிகளை உருவாக்கும் பட்டறையில் கருவிகளைச் செதுக்கிய சிற்பி தாஸ் இப்படி பலரையும் குறிப்பிடலாம் வன்னியிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை பெற வவுனியாதோழர்களின் அர்பணிப்புகள் காரணமாக இருந்தன. இணைந்த மாகாண சபை ஆடசிக்காலத்தில் வவுனியாவில் முகுந்தன் ஐயா வெற்றி என பல ஆளுமைகள் ஒருகிணைந்து இங்கு செயற்பட்டார்கள் இவர்களுடன் தோழர் பிரதாப் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்காக அரச நிர்வாகத்தில் திறம்பட செயற்பட்டார்.