வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்

வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள் இரண்டு தசாப்தங்களாக அனுபவித்து வரும் நீட்சியான துயரங்கள் , புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னரும், சமாதானம் வந்த பின்னரும் , இன சவ்ஜன்யத்தை கட்டி எழுப்ப ஆட்சி மாற்றம் வென்டும் என்று அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பின்னரும் , வடக்கில் நிகழ்ந்த “வரலாற்று மாற்றம்” என்னவெனில் வட மாகாண சபையில் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் “இனப்படுகொலை” குறித்து தீர்மானம் கொண்டு வந்ததுதான். அதுவும் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு பற்றி அல்லது இனச்சுத்திகரிப்பு பண்ணிய குற்றவாளிகளை பற்றி எவ்வித சிலிர்ப்பும் சிலாகிப்பும் இன்றி தீர்மானம் கொண்டு வந்ததுதான் வரலாற்றுத் தவறாகும்.

அது ஒரு புறமிருக்க யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறி வாழும் முஸ்லிம்கள் சிலர் பெரும்பான்மை தமிழ் ஆட்சி அதிகாரத்தினால் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக் கெதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் , வெறுமனே தங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பதை மட்டுமல்ல , அதற்கும் மேலாக தங்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளுக்கும் நியாயம் கோரி நடத்திய போராட்டமுமாகும். வழக்கம்போலவே இப்போராட்டத்திற்கு பரவலான ஊடக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதில் எந்த அரசியல் கட்சியின் பின்னணிப் பலமுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே முன் வந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னேடுத்துள்ளனர் என்றே தோன்றுகிறது. இவர்களின் கோரிக்கைகள் குறித்து இதுவரை வழக்கம்போலவே எந்த அரசியல்வாதிகளும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளவில்லை.!

(Bazeer Seyed)