இந்தியா

இந்தியா என்ற பெயரை ஆங்கிலேயர்கள் வைத்தமைக்கான காரணம் வரலாற்று பின்னணி கொண்டது.

இந்தியாவை இன்று “இந்து” மதத்துடன் இணைத்துப் பேசப்படுவது ஓர் வழமையாக உள்ளது. சிந்து நதி பகுதியில் வாழ்ந்த மக்கள் என்ற ரீதியில் அந்தப் பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும்.
பண்டைய புராதன நாகரீகம் என்று கருதப்படுகின்ற சிந்துசமவெளி நாகரீகமக்கள் வாழ்ந்த பகுதியை, அதற்கு அருகே உள்ள ஈரானியர்கள் சிந்து என்பதை இந்து என்று குறிப்பிட்டு அழைத்தனர்.

சிந்து பகுதியில் வாழ்ந்த மக்களை குறிப்பதற்கே அன்று பயன்படுத்தப்பட்டது. இன்று மதத்துடன் இணைத்து பேசும் ” இந்து ” என்ற சொல்லுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஏனென்றால் அப்போது இந்து மதம் என்றொரு மதமே தோன்றவில்லை. அந்த ” இந்து மதம் ” என்ற சொல்லைக்கூட ஆங்கிலேயர்களே உருவாக்கினார்கள்.

இந்தியாவுக்கென பொதுவான அரசியலமைப்பு பற்றிய சிந்தனை உருவான போது மதம் என்ற அடிப்படையில் மக்களை வகுக்க முனைந்த போது யாரெல்லாம் இஸ்லாமியர்,கிறிஸ்தவர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்ற பொத்தாம் பொதுவான வரையறைக்குள் கொண்டு வந்தார்கள்.

இதற்கு காரணம் இஸ்லாம்,கிறிஸ்தவம் தங்களுக்கென தெளிவான சித்தாந்தத்தைக் கொண்டிருந்தனர் என்பதே.

பண்டை மதங்களான பௌத்தம், சமணம் போன்றவை அழிக்கப்பட்டு அதன் சில அம்சங்களை பிராமண மதம் தாமதாக்கிக் கொண்டு, அவற்றையும் தமக்கு கீழ்பட்ட மதங்களாக புனைவு செய்து பார்ப்பனர் தலைமை வகித்தனர். அதே போல தென்னிந்திய வழிபாட்டுமுறைகளையும் ஒரு கதம்பமாக, ஒரு குடும்பத்தின் உறவுகளாக்கி வைத்திருந்தனர்.

உதாரணம் : சிவனின் மகன் முருகன். விஸ்ணுவுக்கு மருமகன்.
மத்திய ஆசியாவை சேர்ந்த, முக்கியமாக ஆப்கானிஸ்தான், தகிஸ்ஸிதான், உஸ்பிஸ்கிஸ்தான் பகுதிகளில் வாழ்கின்ற Tajik இனத்தைச் சேர்ந்த மக்கள் ஈரானிய கலப்பு மொழியைப் பேசுபவர்கள். இவர்கள் கிரேக்கர்கள் வருகைக்கு முன்னமேயே, அவர்களுக்கு அருகே இருந்த ஈரானியர்கள் போலவே சிந்து நதிப்பகுதியை என்பதை “இந்து” என அழைத்தனர்.

பின்னர், கி.மு.200 இல் கிரேக்க அரசன் அலெக்ஸ்சாண்டர் , சிந்துநதியை அண்டிய உள்ள பகுதிகளை வென்ற போது, மயூர அரசர்களுடன் தொடர்பு ஏற்பட்டதுடன், அங்கே கிரேக்க பிரதிநியாக மெகதனீஸ் [ Megasthenes ], டெமாசெஸ் [ Deimachus ] போன்றோர் சில காலம் பாடலிபுத்திராவில் வாழ்ந்ததாகவும் வரலாற்றுக்கு குறிப்புகள் கூறுகின்றன.

இந்த தொடர்புகளால் கலாச்சார பரிவர்த்தனைகள் நிகழ்ந்த குறிப்புகளையும் நாம் அறிகிறோம். கிரேக்க எழுத்தரான மெகதனீஸ் எழுதிய இந்தியா பற்றிய செய்திகள் இண்டிகா [ Indika ] என்ற புகழ் பெற்ற நூலாக பின்னாளில் தொகுக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரானியர்கள் சிந்துப்பகுதியை ” இந்து ” என்று அழைத்ததை கிரேக்கர்கள் “இண்டிகா” என தமது நூலில் குறித்தார்கள்.

சிந்துநதிப்பகுதி கி.பி. 7ம் நூறாண்டில் அரேபியாவைச் சேர்ந்த Muhammad Bin Qasim என்ற இஸ்லாமிய மன்னரால் கைப்பற்றப்பட்டது. பின், மத்திய ஆசியாவிலிருந்து முகலாய மன்னர்களின் படையெடுப்பு நடந்து கி.பி. 12ம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேயர்கள் [ 1750 ] வரும்வரை முகலாய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.

இந்த முகலாயர்கள் ஈரானிய – மத்திய ஆசியப்பகுதிகளைச் சேர்ந்த மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.இன்றைய ஆபிகானிதான், கஜகஸ்தான், உஸ்கிஸ்பிஸ்தான் பகுதியைச் சார்ந்த மக்கள்.

இவர்கள் தங்கள் ஆளுகைக்குட்ப்பட்ட பகுதிகளை ஸ்தான்[ Stan ] என்ற சொல்லை இணைத்து கூறுவதை வழமையாகக் கொண்டவர்கள்.
இன்றைய ஆப்கானித்தான், கஜகஸ்தான், உஸ்கிஸ்பிஸ்தான், அசர்பஸ்தான் போன்ற நாடுகளை இதற்கு உதாரணம் கூறலாம். Stan [ Place ] என்பது இடத்தைக் குறிக்கும் ஈரானிய சொல்லாகும்.

அந்தவகையிலேயே அவர்களின் ஆளுகைக்குட்ப்பட்ட சிந்து நதிப்பகுதியை, அதாவது அவர்கள் தவறாக ” இந்து ” என்று உச்சரித்த பகுதியை, தங்கள் கட்டுக்குள் வந்த போது, அதை இந்துஸ்தான் என அழைத்தனர். அந்த “இந்து” என்ற சொல் என்பது இன்றைய இந்து என்ற மதத்தைக் குறிக்கும் சொல் அல்ல.

அது பிரதேசத்தைக் குறிக்கும் சொல் என்பதும் மதம் சம்பந்தப்பட்ட சொல் அல்ல என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இஸ்லாமியர்கள் 700வருடம் இந்துஸ்தானத்தை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தார்கள். பல நூறு குறுநில மன்னர்களால் ஆளப்பட்ட, ஒன்றுபட்டு இருக்காத இந்தியா , மன்னர்களின் போட்டா ,போட்டியாலும் , சண்டைகளாலும் சிதைந்து கொண்டிருந்த காலத்தில் [ 1750 ] இந்தியா ஆங்கிலேயர்களிடம் வசமாகியது .

உள்ளுக்குளேயே பிளவுபட்டு, சண்டைகளாலும் சீரழிந்து கொண்டிருந்த இந்திய சமூகத்தை மிக இலகுவாக பிரித்தானியர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

காலத்தோரும் எந்த மன்னர்கள் ஆள்கிறார்களோ அவர்களிடம் அடிபணிந்து சேவகம் செய்யவும் வாய்ப்புகள் கிடைத்த போதெல்லாம் அரசர்களுக்கு மதகுருவாகவும், மந்திரிகளாகவும் அதிகாரமாட்டங்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து வந்த பார்ப்பனர்கள் ஆங்கிலேயர்களுடனும் எடுபிடிகளாகவும் செயலப்பட்டனர்.

பிரித்தானியருக்கு வால் பிடித்த பிராமணர்கள் அவர்களின் ஆட்சியில் செல்வாக்கு மிக்க பிரிவினராகவே இருந்து, அதிகாரங்களில் அமர்ந்திருந்து, அதிகார வர்க்கமாக மாறியிருந்த நிலையில் , பிரித்தானியர்கள் சுதந்திரம் கொடுத்த வேளையில் ” சுதந்திர ” இந்தியாவையும் தம் வசப்படுத்தினர். வரலாற்றில் முதன்முறையாக இந்தியா முழுமைக்கான அறிவிக்கப்படாத அதிகாரம் பிராமணர்களின் கைகளில் சிக்கியது.

அவர்களுக்கு தங்கள் வைதீக / பிராமணமத நம்பிக்கைகளை பிறர் மீது திணிக்க இத்தனை ஆயிரம் வருடங்கள் எடுத்ததால் அதில் கணிசமான அளவு வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

புராணம், இதிகாசம், பாடல், ஆடல், கோயில், சிற்பம், கூத்து என எல்லாக்கலைகளிலும் தங்கள் மூட நம்பிக்கைகளை மன்னர்களின் அதிகார ஆசிகளுடன் திணித்து வைத்திருந்தார்கள்.

இன்றைய நவீன செய்தித் தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் அன்று கிடைத்திருந்தால் எப்பவோ மாற்றி தொலைத்திருப்பார்கள்.
மேலே கிரேக்கர்கள் குறிப்பிட்ட இந்தியாவுக்குள் தமிழ்நாடு அடங்கவில்லை.

அது பற்றி காட்வெல் தனது நூலில் கிரேக்கர்கள் தமிழ்நாட்டை ஆண்ட பாண்டியர்களை பாண்ட்யன் (Pandion) என்றும், அவர்களின் நகரமான மதுரையை மொதெளரா [ Mudora ]என்றும் , பாண்டியர்கள் மட்டுமே பெண்டிரால் ஆளப்பட்டு வந்தனர் எனவும் கிரேக்கர்கள் இதை மெதேரா என்றும், தாலமி கடவுளரின் மெதெளரா என்றும் நாகரிக ஆங்கிலத்தில் முத்ரா என்றும் எழுதியதாகக் குறிப்பிடுகின்றார்.