உலகம் முன்னெபோதையும் விட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம்

உலகளாவிய ஏகாதிபத்தியத்திற்கு இந்த உலகம் பாழ்பட்டு அழிந்து போவதை பற்றி எந்த கவலையும் இல்லை.” கொன்று பலியாக்கப்பட்ட மனிதனின் மண்டையோட்டில் இருந்து அன்றி வேறு எதிலும் இருந்து அமுத பானம் செய்ய விரும்பாத கொடூர தெய்வம்” மார்க்ஸின் தீர்க்க தரிசன வாக்கிற்கு இணங்க ஈராக்கிலும் லிபியாவிலும் ஏன் மத்திய கிழக்கிலும் மேற்காசியாவிலும் நேற்றிருந்த செழிப்புமிக்க வாழ்வை வளத்தைஅழித்தது.மத்திய கிழக்கு எழுபது ஆண்டுகளாக தொடர்ந்து எரிக்கப்பட்டது.

இப்போதும்!ஆப்கானியர்கள் சில தசாப்தங்களுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தார்கள். ஐரோப்பாவில் ஒரு யூகோஸ்லாவியா எப்படி இருந்தது. மானிட மேன்மையின் அழகான ஒரு சோவியத் யூனியன்துண்டு துண்டாக உடைக்கப்பட்டு சின்னா பின்னப்படுத்தப்பட்டு சிதறடிக்கப்பட்டது. மிச்சமாக உலகளாவிய பேரழிவு என மாற்றப்பட்டு இருக்கிறது .பாரிஸ் தொடக்கம் கெய்ரோவரை காலநிலை கரிசனை – வாய் கிழிய பேசுகிறார்கள்.

ஈவிரக்கமின்றி புவிக்கோளையும் மனித குலத்தையும் பேரபாயத்தின் விழிம்பில் நிறுத்தி வைத்திருக்கும் உற்பத்தி உறவு முறை மாத்திரம் அல்ல ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய யுத்தமும் உலகின் பல பகுதிகளை சாம்பலாக்கி விட்டன. எரித்து விட்டன. யூரேனியம் செறிவூட்டப்பட்ட ஆயுதங்களையும் கிளஸ்டர் குண்டுகளையும் உக்கிரேனில் குவிக்கிறார்கள்.இது மத்திய கிழக்கு மேற்கு ஆசியாவை தொடர்ந்து ஐரோப்பாவையும் நரகமாக்கும்.

துருக்கியிலும் இப்போது மொறோக்கோவில் பூகம்பமும் லிபியாவின் பெரும் புயல் வெள்ளம் நாளைக்கு ஐரோப்பாவை ஆக்கிரமிக்காது என்று கனவு காண முடியாது. ஏகாதிபத்திய நலன்களுக்காக ஐரோப்பாவின் நலன்களை பலியிட வேண்டாமே!காலநிலை பேரழிவுக்கு யார் மாபெரும் சர்வதேச குற்றவாளிகள் என்பது உலகறிந்தது.

BRICSஐ தொடர்ந்து இந்தியாவில் நிகழ்ந்த ஜி20 மாநாட்டில் சில உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கபூர்வமான சிலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . உக்ரேனிய யுத்தத்தை முடிவு கொண்டு வருவது யுத்தமற்ற உலகம். உலகளாவிய தெற்கின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை ஆபிரிக்க யூனியனை இணைத்துக் கொள்வதுஆதிக் குடிகளை அழித்து உருவாக்கப்பட்ட நாகரிகம் !?எனப்படுவது உலகத்தின் மீது பிரயோகிக்கப்படுகிறது.

அந்தக் காட்டுமிராண்டித்தனம் இனி மேலும் சகிக்க முடியாது.உலகளாவிய அளவில் பரஸ்பரம் அனுசரித்து வாழ்தல் இன்றைய தேவை. சமத்துவமாக உரிமைகளை அங்கீகரித்து தேசிய எல்லைகளுக்கு அப்பால் எல்லா மக்களுக்குமாக உலகம் திறந்து விடப்பட வேண்டும்.

உலகம் முன்னெபோதையும் விட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம்.உலகின் பெரும் பகுதி வனாந்தரமாகவும் ஒரு சிறு பகுதி பசுமை பூங்காவாகவும் என்ற உலகம் ஒழுங்கு இனி மேலும் சகிக்க முடியாதது.லிபியாவும் மொறோக்கோவும் குற்றவாளிகளை மீண்டும் அம்பலப்படுத்துகின்றன.ஆப்பிரிக்கா கண்டமாக விழித்தெழும் தருணம்இலங்கையிலும் சரி மொரோக்கோவிலும் சரி வகை தொகை அற்ற ஊழல் சூறையாடல் அரசியலின் பிரதிபலிப்புகளையும் விபரீத விளைவுகளையும் காண முடியும்.

இன்றைய உலக நிலைமைகள் பற்றிய பிரக்ஞை இன்றி இலங்கையின் பிரச்சனைகளை தனித்து பேச முடியாது மானுட பேரழிவு ஏற்படுத்திய மூன்று தசாப்த யுத்தத்தையும் சுனாமி பேரழிவையும் பார்த்த நாடு இது.ஆனால் இலங்கையின் பல்லினத்தன்மையையும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் அவசியத்தையும் சமத்துவத்தையும் நிராகரிக்கும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விரோதமான ஜந்துக்கள் இன்றளவில் உயிர்ப்புடன் இருக்கின்றன.இவை தோற்கடிக்கப்படுவதும் வண்ணங்களின் கலவையான உபகண்டத்துடன் உலகத்துடன்இணைந்து சகிப்புத்தன்மை அனுசரித்து வாழ்தல் அந்தப் பயிற்சி இலங்கையர்களுக்கு வேண்டும்!!!-

(Sritharan Thirunavukarsu)