தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!

கல்வியில் சிறந்து விளங்கிய ரமணி, தனது அண்ணன் சிவநாதனின் சீன சார்பு கொம்யூனிச அரசியல் ஈடுபாடு காரணமாக சிறுவயது முதலே அரசியல் அக்கறை கொண்டவராக இருந்து வந்தார்.இந்த இடத்தில் தோழர் சிவநாதன் பற்றியும் சில விடயங்களைப் பகிர வேண்டும். அவர் மாத்தையாவின் நண்பர். மாத்தையாவிடமிருந்த இந்தியா பற்றிய அரசியல் பிரக்ஞை சிவநாதன் மூலமாகவே சாத்தியமானது.

டென்மார்க் குக்கு புலம்பெயர்ந்த பின்னர் சிவநாதன் ‘சஞ்சீவி’ குழுவில் இயங்கி வந்தார். இறக்கும் வரையில் அரசியல் உணர்வு மிகுந்த ஒருவராகவே இருந்தார்.சிறு வயது முதலே ரமணியை அறிந்திருந்த மாத்தையா, ரமணியை தான் சார்ந்திருந்த விபு அமைப்பில் இணைப்பதற்கு முயன்றபோதும், ரமணியின் தெரிவு தோழர் விஸ்வானந்த தேவனின் தலைமையில் இயங்கிவந்த ‘ தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யாக இருந்தது1980ம் ஆண்டு உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த பதினாறு வயதில் ரமணி தன்னை தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் இணைத்துக் கொண்டான்.

வடமராச்சியின் புகழ் பெற்ற ஹாட்லிக் கல்லூரியிலிருந்து 1981ல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டான். அப்போது அவன் எழுதிய கவிதை:

சூரியன் சாய்ந்துகருமை படரும் ஒரு மைமல் பொழுதில்இது நடந்ததுபருவகாலத் தொழிலுக்காய்வந்த இடத்தில்அலையற்று நீளமாய் விரிந்த கரையில்வள்ளத்தைக் கட்டினோம்வாடியில்,நுளம்பு விரட்டிஅலுத்துக் கிடந்தேன்;ஆறுதலாகபையைத் தடவி,அணைஞ்ச சுருட்டை மணலில் புதைத்தும்குறுக்கே மடித்தகடதாசித் துண்டை நீட்டினார்பிந்தி வந்த பொங்கலப்பா.எழுதியது அக்காவே.இப்படித்தான் வந்தது,நெடுநாளாய்க் காத்திருந்த முடிவு:ஓர் Aஒரு B, இரண்டு C என்றதும்பேச்சை நிறுத்தினர்.மௌனம்பிறகு,நாளைக்கு ‘மஸ்கற்”நீங்கள் என்ன வருமெண்டு நினைச்சியள்?’தூரத்து வாடியில்வானொலி இசைத்தது,சூள்லாம்புச் சுடரும்அசையவில்லை,புழுங்கி அவிந்ததுவெளியே வந்தேன்எதிரே கடல் அமைதியாக இருந்ததுஊரில் வாடை அடிப்பதாய் கிசுகிசுத்ததுபுதிய கொப்பிக் கடதாசியின் இனிய மணம்முதுகின் பின்னேநிலவு வழிந்ததுதொலைவில்நட்சத்திரங்கள் கண்சிமிட்டின.(புதுசு 9, யூலை1984)இன ஒடுக்குமுறை கூர்மையடைய ஆரம்பித்த 80களின் ஆரம்பத்தில் மருத்துவ பீடத்தில் மாணவனாக பதிவு செய்தபோதும் முழுநேர அரசியலில் ஈடுபட்டான். 1983ல் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’, ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’யாகப் பரிணாமம் பெற்றபோது அதன் (மிக இள வயது) மத்திய குழு உறுப்பினராகத் தெரிவானான்.தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியின் அரசியல் தத்துவார்த்த சஞ்சிகையான ‘இலக்கு’,பத்திரிகையான ‘முன்னணிச் செய்தி’. உட் கட்சி சஞ்சிகையான ‘பயணம்’முதலானவற்றில் ரமணியின் அரசியல் கட்டுரைகள் வெளிவந்தது.1986ல் முதலில் Telo மீதும் பின்னர் ஏனைய இயக்கங்கள் மீதும் விபுகள் அழித்தொழிப்பை மேற்கொண்ட போதும், இந்திய ஆக்கிரமிப்பின் போதும் களத்தில் நின்று அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும் என செயற்பட்டவன் ரமணி. இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து விபுகள் யாழ்ப்பாணத்துக்குள் மீளவும் நுழைந்தபோது, அவனது நெருங்கிய உறவினரான விபுவின் கடற்படைத் தளபதி சூசை, செல்வி எங்கே நிக்கிறான் என எங்களுக்கு தெரியாது என நினைத்துக்கொண்டு இருக்கிறானா? என உறவினர் மூலம் தகவலனுப்பிய போதும், தப்பியோடாமல் களத்திலேயே நின்றான்.ஈற்றில் விபுகளால் பிடிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டான். *****ரமணிக்கும் எனக்குமான உறவு 1980ம் ஆண்டில் ஆரம்பமானது. இருவரும் ஒரே வயதுக்காரர்களாக இருந்தது அதிகம் நெருக்கமாக இருக்க காரணம். 1983க்கு பின்னான காலத்தில் என்னுடைய வீட்டில் அதிகம் தங்கியிருந்த தோழர்களில் ரமணி யும் ஒருவன்.இறுதியாக அவனுடன் கதைத்தது 1989ல். அப்போது கைபேசிகள் புழக்கத்தில் வரவில்லை. கொழும்பிலிருந்து எனது வேலைத் தளத்துக்கு தொலைபேசியில் பேசினான். அப்போது அவன் எழுத்தாளர் ரஞ்சகுமாருடன் Ranjakumar Somapala S தங்கியிருந்தான். அவனைப் பற்றி ரஞ்சன் எழுதிய கதைதான் “கோளறு பதிகம்”.அதற்கு சில மாதங்களின் பின்னர் அவன் கொல்லப்பட்டுவிட்டான்.எமது மக்களுக்காக தனது மருத்துவக் கல்வி, எதிர்காலம் எல்லாவற்றையும் துறந்து, வாழ்ந்த ஒரு மனிதனைஅவனது 60வது பிறந்தநாளில் நினைவுகூர்வோம்!வாழ்க ரமணியின் நாமம்!