“மனிதனை வாழவிட்டு நீங்களும் வாழுங்கள்” என்று சொன்ன மகத்தான ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்!

அவர் அந்த காலத்தின் ரஷியாவின் மிகபெரிய நிலப்பிரப்புகளை ஒத்த குட்டி பிரபுக்களின் குடும்பத்தை சேர்ந்தவர்.
அந்த பண்ணையில் இருந்து தான் ஜார் மன்னனின் அரசாங்காத்தை எதிர்த்து 200,க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் எழுதியதாக சொல்லப்படுகிறது.

இந்கு அவர் தனது வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளை கழித்திருக்கிறார்.
“அன்னா கரேனினா” என்ற நாவலையும் “போரும் அமைதியும்” என்ற உலக பிரசித்தி பெற்ற இலக்கியங்களை அவர் இங்கேயிருதுதான் எழுதினார்.

அவருக்கு ஆங்கிலம்,பிரஞ்சு,ஜெர்மன் போன்ற மொழிகளை படிக்கவும் எழுதவும் தெரியும். மட்டும் மல்ல 26,மொழிகளை அவர் படிக்க கற்றிருந்தார்.

ரஷிய புரட்சியின் விடிவெள்ளியாக திகழந்த அவருடைய எழுந்துக்கள்.
அந்த நாட்டின் புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது.என்றால் அது மிகையில்லை.

ஜார் மன்னனால் அவர் சிறைப் படுத்தப்பட்டார். அவரிடம் ஏராளமான பொன்னும்,பொருளும் ,புகழும் இருந்தாலும் அதனால் அவர் மகிழ்ச்சி கொள்ளவில்லை. அக்காலத்தில் அவர் உலகத்தில் மிகப் பிரபலம்மிக்கவராக இருந்தும்.வசதியானவராகவும் இருந்தும்
அவர் அந்த தேசத்தின் ஏழை,எளிய மக்களை பற்றியே சிந்தித்தார்.

தன்னிடம் பண்ணையில் வேலைசெய்த பணியாட்களின் பிள்ளைகளுக்காக பள்ளிக்கூடம் நடத்தினார் அவர். அவருடைய எழுந்துக்கள் எல்லாம் உழைப்பாளிகளின் அவலங்களை படம் பிடித்தன மன்னன் ஜார் போலீஸை ஏவி விட்டு அவர் பண்ணை வீட்டை சோதனை போட்டான்.

கிருஸ்த்தவ தலைமை பீடம் அவரை மதப்பிரஷ்டம் செய்தது. மன்னிப்பு கேட்டால் அவரை ஏற்றுக் கொள்வதாக சொன்னது ஆனால் தன் இறுதி மூச்சு இருக்கும் வரை அவர் மன்னிப்பு கோரவே இல்லை கலிலியோ, புரூனோவை போல.

என் எழுத்துக்கள் முழுவதும் மக்களின் சொத்து என்றார் அவர் அப்படி தான் உயிலும் எழுதிவைத்தார். அவர் மரணத்திற்கு பிறகு தோழர் லெனின் தலைமையிலான அரசு அவற்றை அரசுடமையாக்கியது.

தன் இளம் வயதில் பெற்றோரை இழந்த அவர் தமது அத்தையால் வளர்க்கப்பட்டார். அவர் இளமை பருவம் முழுவதும் பிரபுக்களின் வீட்டு பிள்ளைகளையே ஒத்திருந்தது. அந்த காலத்தில் கருங்கடல்
பகுதியில் ஏற்பட்ட போரில் கலந்து கொண்டார் அவர் அந்த அனுபவமே பின்நாளில் போரும் அமைதியும் என்ற உலக பிரசித்தி பெற்ற பெரும் இலக்கியம் வெளிவர காரணமானது.

அவருடைய ஆற்ற மிக்க எழுந்துக்களின் பதிப்புரிமையை குடும்பம் சொத்தாக வேண்டும் என்று நினைத்த அவருடைய மனைவி சோஃபியாவிடம் கோபித்துக் கொண்டு 48-ஆண்டுகால குடும்பம் வாழ்வில் பதிமூன்று குழந்தைகள் பெற்ற தன் மனைவியை துறந்து வீட்டை விட்டே கொள்கைக்காக வெளியேறினார் லியோடால்ஸ்டாய்.

அன்று முதல் தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரைக்கும் ஆஸ்டோபோவா என்ற சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷனில். ஒரு ஸ்டேசன் மாஸ்டர் அறையிலேயே வாழ்ந்து மடிந்தார் அவர். என்னுடைய மரணத்திற்கு பின்பு எந்த சடங்கும் எனக்கு செய்யக் கூடாது என்று எழுதி வைத்தார் அவர். எளிமையான முறையில் தன்னை அடக்கம் செய்யும் படி கேட்டு இருந்தார். அவர் கேட்டு கொண்ட படியே அந்த இலக்கியவாதியின் ஆசைகனவு ஏற்கப்பட்டது.

இன்று அந்த இரயில் நிலையமானது அவருடைய பெயரால் “டால்ஸ்டாய்” இரயில் நிலையம் என்றே அழைக்கப்படுகிறது. அவர் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் உழைக்கும் மக்களுக்காக
சிந்தித்தார் எல்லாவற்றையும் துறந்து வாழ்ந்த மகத்தான மனிதனரான
“லியோ டால்ஸ்டாய்”இப்படி சொன்னார்.

சொத்து,சுகம்,வீடு வாசல் பண்ணை பங்களா பணத்தை பெருக்கி கொள்ள பேராசைப்பட்டு மனிதர்களே பேய்களாக அலையாதீர்கள். மக்களை சுரண்டியும் ஏமாற்றியும் அடிமைபடுத்தியும் வாழ நினையாதீர்கள் மனிதனிடம் அன்பு காட்டுங்கள்,இரக்கம் காட்டுங்கள் கருணைக்காட்டுங்கள்.
அவனை வாழவிட்டு
நீங்களும் வாழுங்கள் !!

மனிதனுக்கு தேவை பண்ணைகள்
அல்ல ஆறாடி நிலம் தான் என்றுரைத்த அந்த மகத்தான எழுத்தாளர்.
ரஷிய புரட்சியின் நம்பிக்கை கீற்று.
(IIan marxist)