மரணங்களை கடந்து செல்லும் தேசம்….

முதலில் பொருளாதார நெருக்கடி ஊழல் என்று போராட்டங்கள் ஆரம்பித்து பொருட்களின் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் காத்திருப்பு என்ற போது சமைப்பதற்கு பாவித்தற்கான பாதுகாப்பற்ற சிலின்டர்கள் வெடித்து மரணங்கள் நிகழ்ந்த போது அரசும் சிலின்டர் உற்பத்தி நிறுவனங்களும் அரசு சார்பு ஊடகங்கள் இயல்பாக இதனை கடந்து சென்றனர்.
பொது மக்களும் என் வீட்டில் நடைபெறவில்லை என்றாக இயல்பாக கடந்து போனதை உணர முடிந்தது.

அதன் பின்னர் மன அழுத்தங்களால் தற்கொலைகள் என்று பல்கலைக் கழக மாணவர்கள் என்று தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போதும் அது என் பிள்ளை இல்லை…. என் ஒழுங்கையிற்குள் இல்லை… மிகச் சிறய விகிதம்தான் நடைபெறுகின்றது… என்றாக பொதுப்புத்தியும் அரசு கடந்து செல்லும் நிலமைகளை அதிகம் காண முடிகின்றது…

இன்று எல்லாவற்றிற்கும் உச்சம் வைத்தாக மருத்துவமனையில் பொது மக்களுக்கு வழங்கும் மருந்துகள் மரணத்தை ஏற்படுத்திய போது புள்ளிவிபரங்கள் மூலம் அது சிறிய அளவில் என்று கடந்து செல்வதும்…..

அந்த குறிப்பிட்ட மருந்தை தற்காலிகமாக தடை செய்துவிட்டோம் என்ற சாக்கு போக்கு கூறலுமாக அதுவும் துறைசார் நிபுணத்துவர்களும் கடந்து செல்லும் போக்கு ரொம்பவும் வருத்தத்தையும் கவலையும் அளிகின்றது.
நேயை மாற்றும்…? மருந்து மருந்தகம் வைத்தியசாலை கொலை களமாக மாறிவிடுமோ என்ற அச்சம் சாமான்ய மக்களிடம் வந்து விட்டால் நோய்தீர்க்கும் மருந்தை உட்கொள்வதை சிகிச்சை பெறுவதை பீதியுடன் அணுகும் போக்கும் அதனை வழங்கும் வைத்தியத்துறையினரரை கொல்ல வருபவர்களாக பார்க்கும் நிலமைகள் அதிகமாகிவிடும்.

இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் இதன் ஆரம்ப நிலையைக் கடந்து மருத்துவத்துறை வந்துவிட்டதாக என்னால் உணர முடிகின்றது.
இது மிகவும் ஒரு மோசமான நிலமை ஆகும்.

நம்பகத் தன்மையை இழத்தல் அதுவும் மருத்துவத் துறை என்பது ஒரு நாட்டிற்கு மனிதகுலத்திற்கு பெரும் அவலங்களை ஏற்படுத்தும்;. இதில் இலங்கையைப் பொறுத்த வரையில் தமிழ் மொழி பேசுபவர்கள் சிங்கள மொழி பேசுபவர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக அறிய முடிகின்றது

இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடமும் அது சார்ந்த போராட்டங்களும் எற்பட்டாக வேண்டும்.

இந்த மருத்துவத்துறை அவலத்திற்கு அரசிற்கு நூறுவீத பொறுப்புண்டு.
இவற்றுடன் அன்றாடம் நிகழும் விபத்து மரணங்களையும் நாம் சதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை வேகக் கட்டுப்பாடற்ற கவனக்குறைவான தொலைபேசிப் பாவனையுடனான நித்திரை இல்லாமல் வாகனம் ஓட்டுதல் என்றான விடயங்களும் அதிகம் கவலை அளிக்கின்றது.

நாட்டிற்கான கடன், பொருளாதார சிக்கல் ஐ.எம்.எவ் இன் கடனை நம்பிய வாழ்வு பல்தேசிய இனங்களை அரவணைத்து சமஉரிமையுடன் வாழாத சிந்தனை என்றாக அரசு விகாரைகளையும் தொல் பொருள் ஆராய்ச்சி என்றாக நில அபகரிப்புகள் சிறுபான்மையினரை அச்சுறுத்தும்(இன்று இது பெரும்பான்மை சமூகத்திற்கும் பொருந்தி இருக்கின்றது அளவில் சற்று மாறுதல் இருந்தாலும்) இராணுவம் செலவினங்களை அதிகரிப்பு அதுசார்ந்த விடயங்கள் சட்டங்கள் என்றாவிட்டால் நாட்டின் பொருளாதாரமும் தரமான மரணத்தை தவிர்க்கும் எரி சிலன்டர்களும் மன அழுதத்தை குறைக்கும் மாணவ வசதிகளும் தரமான மருந்துகளையும் வழங்க முடியாது.

மருத்துவர்களும் நாட்டை விட்டு ஓடக் கூடியவர்களும் நாட்டை விட்டு ஓட எஞ்சி இருப்பவர்கள் மேலும் அவலத்திற்கு உள்ளாகும் அவலமே நீடிக்கும் நிலமைகளை இலங்கை நிகழ்வுகள் கட்டியம் காட்டி நிற்கின்றன.
இவற்றை எல்லாம் மீறி அர்பணிப்பு உணர்வுடன் செயற்படும் மருத்துவத் துறையினர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் சமூக ஆர்வலர்களின் செயற்பாடுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நம்பிக்கை தருவதாக அமைகின்றது. அவர்களுக்கு வாழ்த்துகள்

ஆனாலும் இவை போதுமானதாக இல்லை என்றே உணர முடிகின்றது.
யுத்தம் தின்ற மனித உயிர்களும் அது இருதரப்பிலும் மனித உயிர்களை மலினமாக பார்க்கு மனநிலையை இலங்கை முழுவதும் ஏற்படுத்யிருக்கின்றதோ என்ற உளவியல் விடயம் இதற்குள் இருப்பதாக என்னால் உணர முடிகின்றது. அதுதான் மனித உயர்களின் இழப்புக்களுக்கெதிரான விழிப்புணர்வகளும் போராட்டங்களும் சமூகத்திற்குள் அதிகம் ஏற்படாததற்கு காரணமோ என்று எண்ணுவதற்கான தார்மீக காரணங்கள் வலுவாகவே உள்ளன.

உயிர்களின் பெறுமதி அளப்பரியது இந்த இழப்புகளை அனுபவித்த எம்மில் பலரும் உணருவோம். எனவே மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் மனநிலையில் இருந்து விடுபடுவோம். அவல மரணங்களை தடுத்து நிறுத்தும் முறமைகளை ஏற்படுத்துவோம்.