வாழைப்பழ நாடுகள் (பகுதி-1)

(Ravindran Pa)

2021 கணக்கெடுப்பின்படி வாழைப்பழ உற்பத்தியானது,

  1. இந்தியா – 33 மில்லியன் தொன்
  2. சீனா – 11.7 மில்லியன் தொன்
  3. இந்தோனேசியா – 8.7 மில்லியன் தொன்
  4. பிரேசில் – 6.8 மில்லியன் தொன்
  5. எக்குவடோர் – 6.6 மில்லியன் தொன்
  6. பிலிப்பைன் – 5.9 மில்லியன் தொன்
  7. அங்கோலா – 4.3 மில்லியன் தொன்
  8. குவாத்தமாலா – 4.2 மில்லியன் தொன்
  9. தன்சானியா – 3.5 மில்லியன் தொன்
  10. கொஸ்ரா றீக்கா – 2.5 மில்லியன் தொன்
    என்ற கணக்கில் விளைச்சலாகிறது.
    இந்தியாவில் 800’000 ஹெக்ரர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. மகாராஸ்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேஷ், மற்றும் அசாம் பிரதேசங்களில் இவை பெருமளவில் பயிரிடப்படுகிறது.
    இருந்தபோதும் இந் நாடுகளில் பலவும் உள்நாட்டுச் சந்தைகளுக்கான தேவைகளையே மையமாகக் கொண்டிருக்கின்றன. உலகின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக எக்குவடோர் 24 சதவீதமும், கொஸ்ரா றீக்கா 12.9 சதவீதமும், பிலிப்பைன்ஸ் 7.8 சதவீதமும், கொலம்பியா 7 சதவீதமும், குவாத்தமாலா 6.5 சதவீதமும் என்ற அடிப்படையில் இருக்கின்றன. 5 பெரும் கம்பனிகள் Dole, Del Monte, Chiquita, Fyffes and Noboa உலக சந்தையின் 80 வீதமான வாழைப்பழ ஏற்றுமதியை கட்டுப்படுத்துகின்றன. வாழைப்பழத்தின் அரசியலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.