இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் இன்று 2,433 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 145,202ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்நிலையில், இனிமேலும் இனங்காணப்படும் கொவிட் -19 தொற்றாளர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அண்மையில் இருக்கும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.