சம்பள உயர்வு திருப்தியில்லை! லோரன்ஸ்

கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு திருப்திகரமானதாக இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான லோரன்ஸ் தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 730 ரூபா வழங்கும் வகையில் இன்று கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவந்தன. தொழிலாளர்களும் களத்தில் இறங்கி போராடினார்கள். எனவே, அந்தப் போராட்டங்களுடன் ஒப்பிடுகையில், அதிகரிக்கப்பட்டுள்ள தொகை திருப்திகரமானதாக இல்லை என்றே கூறவேண்டும்.அத்துடன், இடைக்கால கொடுப்பனவுக்கும் இந்த நிலுவைச் சம்பளத்துக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை. தம்முடைய இயலாமையை வெளிப்படுத்துவதற்காகவே இப்படியானதொரு குற்றச்சாட்டு எம்மை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளது என லோரன்ஸ் தெரிவித்தார்.