தமிழன்டா……!

நேற்று மன்னார் சென்று திரும்பும் வழியில் வீதியின் மறுபுறத்தில் நின்றவாரே கையை காட்டி மறித்தார் போக்குவரத்துகாவல்துறை அதிகாரி வீதியை வீட்டு இறக்க இடமில்லை ஒரேமுள்ளும் தடிகளும் ஆகவே வீதியிலே அபாய விளக்குகளை ஔிரவிட்டவாறு காரினை நிறுத்தினேன் கீழே இறக்கி நிறுத்த சொன்னார் நான் முடியாது முட்கள் தடிகள் என்றேன் கடுப்பானவாரே பத்திரங்களை கேட்டார் கொடுத்துவிட்டு கண்ணாடிகளை உயர்த்தி கொண்டேன் சுத்தி சுத்தி பாத்தார் எல்லாம் சரியாக இருந்தது. நான் உள்ளே இருந்தமை இறங்காமை வாகனத்தை கரையில் நிறுத்தாமை என்பவற்றால் கடுப்பானவர்.ரயர் தேய்ந்திருக்கேன்றார்.நான் சொன்னன் இன்னும் 15000 கிலோமீற்றர் ஓடும் என்று இல்லை தவறுஎன்றார் நான் சரி என்றேன்.

வீதியை கடந்து சென்று இந்த பத்திரத்தை தனி சிங்களத்தில் எழுதி கொண்டுவந்து கண்ணாடியை தட்டினார் நான் சிறிய அளவு பதித்துவிட்டு தமிழில் இல்லை என்றேன்.கண்ணாடிக்குள்ளால் டாஸ்போட்டில் போட்டார் நான் வெளியே விசிறிவிட்டேன் அதை பிடித்து கொண்டு மீண்டு தர முயற்சித்தார் நான் வேண்டவில்லை.எனது காரின் உள்ளே இருந்தவர் எதுவும் புரியாமல் முளிக்க காரைவிட்டு இறங்கினேன் அவரும் மறு கரைக்கு சென்றார்.பின் தொடர்ந்த நான் எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை தாரும் இல்லை இதை தமிழில் தாரும் என வாக்குவாதம் ஆரம்பமாகியது.
இந்த தேய்வுக்கு சட்டப்படி தவறு என்று தண்டப்பத்திரம் எழுதவேண்டும் என்றால் இது வடக்கு மாகாணம் இங்க தமிழில் தான் எழுதி தர வேண்டும் என்பது சட்டம் நான் தமிழ் ஆக தமிழில் தாரும் என தமிழில் சொன்னேன் உடனே இது இலங்கை நான் சிங்கவன் எனக்கு சிங்களம் தான் தெரியும் என்றார்.நான் நீர் சிங்களம் நான் தமிழ் ஆக ஆங்கிலத்தில் எழுதி தாரும் என தனக்கு ஆங்கிலம் தெரியாது நான் காவல்துறையே நான் தருகின்றேன் பெற்றுக்கொள் என்றார் நான் கேட்டன் அரச ஊளியர்கள் 5வருட சேவைக்காலத்தில் இரண்டாம் மொழி தேர்ச்சி பேற்றால் தானே சம்பள உயர்வு உமது இலக்கத்தை வைத்து பார்க்கும் போது பல வருட சேவை என்பது தெரிகின்றது பிறகு எப்படி தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது என்றேன் அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது கூட நின்றஇரு காவல்துறையும் சமாதானமாக வேண்டிக்கொள் என்றனர்.நான் முடியாது எப்படி நம்புவது ரயருக்கு தான் எழுதி உள்ளது என கேக்க ஐஜீயிடம் போய் சொல்லு இப்ப இத வேண்டு என்றார்.நான் கேட்டன் 3000 தமிழ் காவல்த்துறையை வடக்கிற்கு வேலைக்கு போட்டது அவர்களில் யாரையும் ஏன் உங்களின் கடமையில் வைத்துக்கொள்வில்லை என்றேன் அதற்கு அவர்கள் காவல் நிலையத்தில் என்றார் அப்ப அங்க போய் தமிழில் எழுதிவாரும் என்றேன் அத ஒஐசிட போய் கேட்டு மாத்தும் என்றார் நான் சொன்னன் அது சரி ஆனால் அங்க கொண்டு போக இத நான் எப்படி பொறுப்பெடுப்பது அதில் வேறஎழுதி இருந்தால் என்றேன் கடும் கடுப்பானவன் காவல் நிலையத்தில் இருந்த தமிழ் போக்குவரத்து உத்தியோகத்தரை தொலைபேசியில் அழைத்தான் நான் திரும்பிச்சென்று காரில் அமர்ந்து விட்டேன் 15 நிமிடத்தின் பின் குறித்த தமிழ் உத்தியோகத்தர் வந்து தமிழில் எழுதி அவரிடம் கொடுக்க நால்வருமாக வந்தார்கள் வாக்குவாதப்பட்டவர் கடுமையான முகத்துடன் தாளை நீட்டினார் பெற்றுக்கொண்டேன் தமிழ் உத்தியோகத்தர் சற்று பெருமையுடன் புன்னகைத்தார் மற்றவர்களும் பொறு வழமா மாட்டுவாய் தானே என்பது போல பார்த்தார்கள்.

15 நிமிட தாமதம் ஆனால் என்னைமாதிரி கிறுக்கங்களுக்காவது கடமை நேரத்தில் தமிழ் உத்தியோகத்தர்களை கூட்டிச்செல்வார்கள்.எழுதுவது என்று முடிவானால் பயப்பிடாது தர்க்கியுங்கள் தமிழில் எழுதி வாங்குவதற்கு

(Niresh Rakul Rajah)