தென் கொரியக் கப்பலைக் கைப்பற்றிய ஈரான்

ஓமானின் கடற்பரப்பில் ஈரானிய அதிகாரிகளால் தென்கொரிய இரசாயனத் தாங்கிக் கப்பலொன்று கைப்பற்றப்பட்டதை தென்கொரியா உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதன் உடனடியான விடுதலையை வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வளைகுடாவை இரசாயங்களால் அசுத்தமாகியதற்காக காவலர் கடற்படையால் கப்பல் கைப்பற்றப்பட்டதாக ஈரானிய அரச தொலைக்காட்சி உள்ளிட்ட சில ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹன்குக் கெமி எனப்படும் குறித்த கப்பலானது 7,200 தொன்கள் எதனோலைக் கொண்டிருப்பதாக அரை உத்தியோகபூர்வ தஸ்னிம் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்க தடைகளால் தென் கொரிய வங்கிகளில் முடங்கியுள்ள ஏழு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை தென்கொரியாவை விடுவிக்குமாறான ஈரானின் வலியுறுத்தலைக் கலந்துரையாட ஈரானுக்கு தென்கொரிய பிரதி வெளிநாட்டமைச்சர் செல்லவிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.