தோழர் மைதிலி சிவராமன் அஞ்சலிகள்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மைதிலி சிவராமன் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். 1960-1968 காலத்தில் ஐ.நா.வில் இந்திய தூதரக உதவியாளராக பணியாற்றிவர் மைதிலி சிவராமன். இடதுசாரிய தாக்கம் பெற்ற அவர், தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். மார்க்ஸிஸ்ட் பெண்ணுரிமை இயக்கத்தில் தீவிரமாக இயங்கி, அதன் முக்கியத் தேசிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். 1968 டிசம்பர் 25 இல் நடைப்பெற்ற கீழ் வெண்மணிக் கொடுமையை கள ஆய்வுசெய்து ‘Haunted by fire’ என்னும் நூலை இயற்றினார். அந்நூல்தான் அன்றைக்கு வெண்மணிக்கொடுமையை உலகிற்கு எடுத்துச்சொன்ன ஆங்கிலநூலாக இருந்திருக்கிறது. அதுபோலவே, வாச்சாத்தி வன்கொடுமைகளை களத்திற்கு சென்று ஆவணப்படுத்தி, போராடி வெளியுலகிற்கு அக்கொடுமையை பரவலாக தெரியப்படுத்தியவர் மைதிலி சிவராமன் அவர்கள்.
தம்முடைய 81 வயதில் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டு இன்று உயிரிழந்துள்ள மூத்த தோழருக்கு செவ்வணக்கம்.
இராமச்சந்திர மூர்த்தி.பா