நம்ப முடியாது; ஆனாலும் உண்மை! ஈரானில் ஒரு லயனல் மெஸ்ஸி!

அச்சு அசலாக அந்த இளைஞர் உலகப் பிரபல உதைப்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி போலவே இருக்கிறார். அவர் ஈரானைச் சேர்ந்தவர். அவரது பெயர் ரிசா பர்தேஷ். சமயங்களில் ரிசா பர்தேஷ் பார்சிலோனா வீரர் லயனல் மெஸ்ஸியின் உதைப்பந்தாட்டத்திற்கான மேலங்கியைப் போன்ற 10 இலக்கம் கொண்ட சட்டையை அணிந்து கொண்டே வெளியில் செல்கிறார். அப்போதெல்லாம் அவருக்கும் மெஸ்ஸிக்குமிடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாமலிருப்பதால், ஈரானியத் தெருக்களில் அவரைக் காண மக்கள் கூட்டம் திரண்டு விடுகிறது. இது பொலிஸாருக்கு மிகுந்த தொல்லையையும் கொடுக்கிறது. அதனால் அவரைச் சமயங்களில் போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கே கொண்டு போகிறார்களாம் ஈரானியப் போலீசார்.

அண்மையில் ஐரோப்பியாவில் மிகப்பெரிய விளையாட்டுத் தொலைகாட்சி சானலான யூரோ ஸ்போர்ட்ஸ் (Euro Sports) தனது ட்விட்டர் பக்கத்தில்,ஒரிஜினல் லயனல் மெஸ்ஸியின் செய்திக்கு இந்த ஈரான் ரிஸாவின் படத்தைப் போட்டதும் குறிப்பிடத்தக்க வேடிக்கையாகும்.
2014 ம் ஆண்டு ஈரானுக்கு எதிரான போட்டியொன்றில் ஆர்ஜன்ரீனா கோல் அடித்து அந்த சுற்றுப் போட்டியிலிருந்தே ஈரானை வெளியேற்றிய ஆட்டத்தை டி.வி. யில் பார்த்த ரிஸாவின் தந்தை, அந்த ஆட்டத்தைப் பார்க்கப் போயிருந்த ரிஸாவிடம் ”எதற்காக நீ ஈரானுக்கெதிராக கோல் போட்டாய்…? இனி நீ வீட்டுக்கே வர வேண்டாம்!” என்று கோபமாகக் கூறியது மற்றுமொரு வேடிக்கையான கதை.