பப்பு

எல்லா கட்சித் தலைவர்களும் பால்தாக்கரேக்கு பயந்து மயான அமைதி காக்கும் நேரம், டெல்லியில் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்து, இந்த நாட்டில் எங்கும் செல்லவும் வசிக்கவும் இந்திய குடிமகனுக்கு உரிமை உண்டு. எவரையும் தடுக்கும் உரிமை இந்த நாட்டில் எவருக்கும் கிடையாது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் உரிமையுள்ள இடம் மும்பை என்று பதிலடி தருகிறார்.

இப்படி பேசிவிட்டு ராகுல்காந்தி மும்பையில் கால் வைக்க முடியாது என்று எச்சரிக்கிறார் தாக்கரே.

மறுநாளே மும்பையில் வந்திறங்குகிறார் ராகுல்காந்தி. லோக்கல் மின்சார ரயிலில் சாதாரண வகுப்பில் அதுவும் பயணிகளோடு நின்று கொண்டே பயணிக்கிறார். நேரே சிவசேனா தலைமை அலுவலகம் இருக்கும் சிவசேனாவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தாதரில் வந்து இறங்குகிறார். சாவகாசமாக நடைமேடை கடையொன்றில் தேனீர் அருந்துகிறார்.

திடீரென்று தங்கள் அருகே ராகுல்காந்தி நிற்பதைப் பார்த்து மக்கள் கூட்டம் மகிழ்ச்சியும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

லோக்கல் வாடகை டேக்ஸி ஒன்றில் ஏறி தாதரை ஒரு ரவுண்ட் சுற்றுகிறார். மீண்டும் செய்தியாளர்களை மும்பையிலேயே சந்திக்கிறார். இந்த தேசத்தில் எங்கும் செல்லவும் வசிக்கவும் இந்திய குடிமகனுக்கு உரிமை உண்டு. மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம் என்று மீண்டும் மும்பையிலேயே பேட்டியளித்து விட்டு டெல்லி திரும்புகிறார்.

அவர் டெல்லி திரும்பும்வரை புலி என்று வர்ணிக்கப்பட்ட பால்தாக்கரேயின் மூச்சுக்காற்று சத்தம் கூட வெளியில் கேட்கவில்லை. புலி பூனையாக பதுங்கிய நாள் அன்று. அந்த பிரச்சனையும் அதோடு முடிவுக்கு வந்தது.

அவர் பப்பு கிடையாது. மோடி, தாக்கரே போன்ற பிரிவினை வியாதிகளுக்கு #ஆப்பு.

பயம் என்ற வார்த்தையையே அறியாத தியாக பரம்பரை. இன்றும் சில அறிவிலிகள் அவருக்கு எதிராக கூவுகிறார்கள் என்றால் அவரால் கடுமையாக பாதிக்கப்பட்டதன் பின்னணியாகத்தான் இருக்கும்.

இந்த தேசத்தை காக்கும் தலைவன்
திரு. Rahul Gandhi அவர்கள்