‘போர்குற்றம் பற்றி பேசுவதற்கு த.தே.கூவுக்கு தகுதியில்லை’

திகிலிவெட்டையில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“2010ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து, தமிழ் மக்களிடம் எப்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்கு கேட்கத் தொடங்கிதே அன்றிலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக பேசுவதற்கு தகுதியை அது இழந்து வந்துவிட்டது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் நிதி நிர்வாக இருப்பும் பொருளாதார பாதிப்புகளையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். இவர்களுக்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்வதை விடுத்து தொடர்ந்தும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு முட்டுக் கொடுப்பது இவர்களின் வாடிக்கையாக உள்ளது.

“இதனைமாற்றவேண்டும். அப்போதுதான், கிழக்கு மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.