மரம் நடுகை மாதம் பகுதி 4

(வடகோவை வரதராஜன்)

முன்னைய தொடர்ச்சி

நான் முன்பு கூறிய மாதிரி ;
நாம் நடும் மரங்கள் மனிதனுக்கு , விலங்குகளுக்கு பறவைகளுக்கு , தேனீக்களுக்கு பயன்படுவையாக இருக்கவேண்டும் . ஒரு மண்ணுக்கு சம்மந்தம் இல்லாத மரத்தை நாம் நடும் போது அது வளராது அல்லது வீரிய வளர்ச்சியைக் காட்டாது . உங்கள் சூழலில் இயற்கையாக என்ன மரங்கள் வளர்ந்திருக்கின்றன என அவதானியுங்கள் . அவற்றை நடுகை செய்யுங்கள்