மீரியபெத்த இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டமும் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை ஆய்வரங்கும் 2016.11.06, 9.30 மணிக்கு, நகரசபை மண்டபம், ஹட்டன்.

மலையக சமூக நடவடிக்கை குழுவினால் மீரியபெத்த பேரவலம் இடம்பெற்ற ஒக்டோபர் 29ஆம் திகதியை மலையக மக்களுக்கான காணி வீட்டு உரிமை தினமாக, பேரவலம் இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் இடம்பெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில் பிரகடனம் செய்திருந்தது. அந்த வகையில் மலையக சமூக நடவடிக்கை குழுவின் ஏற்பாட்டில் மலையக மக்களின் காணி வீட்டுரிமையை வலியுறுத்தி மீரியபெத்த பேரவலத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான 2வது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டமும் மலையக மக்களின் காணி வீட்டு உரிமை ஆய்வரங்கும் எதிர்வரும் 2016.11.06ஆம் திகதி (ஞாயிறு) காலை 9.30 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் முதல் அங்கமாக மீரியபெத்த அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தல் இடம்பெறும். அதன் பின்னர் இரா. சந்திரமோகம் தயாரித்த ‘மீரியபெத்த தந்த அனுபவங்கள்’ என்ற காணொலி ஒளிபரப்பப்படும். இரண்டாவது அங்கமாக ஆய்வுரைகள் இடம்பெறும். ‘மலையகத்தில் அதிகரித்து வரும் மண்சரிவு அனர்த்தங்களும் எதிர்கொள்வதற்கான சமூக நடவடிக்கைகளும்’  என்ற தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக புவியில்துறை விரிவுரையாளர் வீரசிங்கம் வசந்தகுமாரியும், ‘வேரறுக்கப்பட்டவர்கள்: மலையக மக்களின் காணி வீட்டு உரிமை பிரச்சினையை விளங்கிக் கொள்ளல்’ என்ற தலைப்பில் சுகுமாரன் விஜயகுமாரும், ‘மலையக மக்களின் காணி வீட்டு உரிமையும் சட்டப் பிரச்சினைகளும்’ என்ற தலைப்பின் சட்டத்தரணி நேரு கருணாகரனும் ஆய்வுரை  நிகழ்த்தவுள்ளனர்.

நிறைவாக மண்சரிவு அபாயத்தில் இருந்து தப்புவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்பூட்டும் துண்டுபிரசுரம் வெளியிட்டு வைக்கப்படும். நிகழ்வுகளை சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் பானுசந்தர் தொகுத்து வழங்குவார். மலையக சமூக நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்புக் குழு அனைவரையும் அழைக்கிறது. தொடர்புகளுக்கு கருணா 071-5694071, விஜய் 071-6275459