20 வருடங்களாக உயராத எம்.பிக்களின் சம்பளங்கள்?

குறித்த செய்தியை மறுத்த அவர் ,இவ்வாறான செய்திகளைப் பரப்புபவர்கள் சிறப்புரிமைக் குழுவின் முன் கொண்டு வரப்பட வேண்டுமென தெரிவித்தார்.

”நாட்டில் இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், கடும் வறட்சியால் நாட்டின் விவசாயிகள் அவதிப்படும் நேரத்தில் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் அப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள்.

சிறிமாவோ பிரதமராக இருந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் சிறப்புரிமை காணப்பட்டதாகவும், தற்போதைய நாட்டின் நிலவரத்தில் எந்த பாராளுமன்ற உறுப்பினரும் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 20 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படாத போதும் அவர்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் நிலைமையைக் கையாண்டு வருவதாகவும் அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்தார்.

வரியில்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கோரி நிதியமைச்சுக்கு எந்தக் கோரிக்கைகளும் வரவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அப்போது தெரிவித்தார்.