5G யால் விமான நிறுவனங்கள் அச்சம்

5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க விமான நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. இது குறித்து அமெரிக்கன் எயார்லைன்ஸ், டெல்டா எயார்லைன்ஸ் மற்றும் யுனைடெட் எயார்லைன்ஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள், அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 5ஜி தொழில்நுட்பத்தால் விமானப் பயணிகள், சரக்கு ஏற்றுமதி மற்றும் மருத்துவ விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் விமான ஓடுபாதைகளின் அருகே இருந்து 5G சமிக்ஞைகள் விலக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.