GCE(O/L)-2021 : கிழக்கு மாகாணம்

அண்மையில் வெளிவந்த 2021ஆம் ஆண்டிற்கான கபொத(சா /த) பரீட்சை முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களில், மட்டக்களப்பு கல்வி வலயம் (நகரப்பாடசாலைகளை உள்ளடக்கிய வலயம்) இலங்கையில் உள்ள 100 கல்வி வலயங்களில் முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது. இவ்வலயம் கடந்த வருட பரீட்சையுடன் ஒப்பிடும்போது உயர்தரத்துக்கு தகுதி பெறுவோரின் வீதத்தில் 12% அதிகரிப்பை பெற்றுள்ளது. வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுக்கும், மற்றைய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்புரி அமைப்புக்கள், பெற்றோர், மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.

படுவான்கரை என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 8.7% அதிகரிப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் வளங்கள் குறைந்த இவ்வலயம் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அகிலா கனகசூரியம் தலைமையில் மிகவும் வளர்ச்சி கண்டு வருகின்றது.
முஸ்லீம் கிராமங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, கல்குடா மற்றும் திருகோணமலை மாவட்ட கிண்ணியா வலயங்களும் 3-4% சித்திவீத அதிகரிப்பை பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணம் 2018ஆம் ஆண்டு வரை இறுதி மாகாணமாக பலகாலம் இருந்து வந்தாலும் படிப்படியாக முன்னேறி தற்போது 4 வது மாகாணமாக உயர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.