‘ஐக்கிய அமெரிக்கா வெளியேறுகிறது’

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அடுத்தாண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி ஐக்கிய அமெரிக்கா வெளியேறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தலை ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடமிருந்து பெற்றதைத் தொடர்ந்தே மேற்குறித்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ளது.

கையூர் தியாகிகளின் கதை

(Maniam Shanmugam)
கையூர் தியாகிகளின் 77ஆவது நினைவுதினம் இவ்வாண்டு (2020) மார்ச் 29ஆம் திகதி கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்தத் தியாகிகள் பற்றி எனக்கு அக்கறை வந்ததிற்குக் காரணம், அவர்களது வீரப்போராட்டம் பற்றியும், தியாகம் பற்றியும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சனா என்பவர் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்றொரு எழுதிய நாவலை வாசித்த பின்னர்தான்.

24 மணிநேரத்தில் 256 பேருக்கு தொற்று

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1980ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி.எச்-இல் சிகிச்சைப்பெற்று வந்த ஒருவரே இறுதியாக குணமடைந்துள்ளார். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 256 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ், மன்னாரில் 21 பேர் சுய தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத்தை பிரிக்கும் நேரம்

(ச. சந்திரசேகர்)

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணி நேரத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கத்தினால் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இந்த வாரத்தில் பரவலாக பேசப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ்: “இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” – எச்சரிக்கும் ஆய்வு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

ரௌத்திரம் பழகு

“திருமணமாகி ஒன்பதே நாட்களான மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான் கணவன்” என்ற செய்தி தொடர்பான ஆதங்கத்தை, சென்ற வாரம் எனது முகநூல் பக்கத்தில் பகர்ந்தேன்.

இனத்துவத்தின் வெற்றியும் ஜனநாயகத்தின் தோல்வியும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

விடுதலைப் போராட்டம் என்பது, அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின், விருத்தியடைந்த நிலை எனக் கூறலாம். இனக்குழுமம் ஒன்றின் வாழ்வு, இன ஒடுக்கலாகவும் அடக்குமுறையாகவும் இன ஒழிப்பாகவும் மாறும்போது, அதற்கெதிரான போராட்டமும் வளர்ச்சி பெற்று, விடுதலைப் போராட்டமாக வடிவம் பெறுகிறது.

ஆயிரமும் காரணங்களும்

(மயில்வாகனம் திலகராஜா)

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் தொடர்பான அறிவிப்பும் பேச்சுவார்த்தைகளும் மறுப்புகளும் போராட்டங்களும் வாக்குறுதிகளும் அமைச்சரவைப் பத்திர மும் என, ஐந்து வருடங்கள் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.

கல்வி தந்தைகளின் அலப்பறைகள்

இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல.