‘அகழ்வாராய்ச்சியில் தமிழர்களையும் இணையுங்கள்’

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு ஆராய்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஹட்டனில் ஆசிரியைக்கும் மாணவர்களுக்கும் கொரோனா

ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலும் 4 மாணவர்களுக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாடசாலையில் மாணவருக்கு தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஐவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்குத்தானே பொதுமன்னிப்பளிக்கிறாரா ட்ரம்ப்?

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இதுவரையில் தனக்குத்தானே பொதுமன்னிப்பளிப்பதை தெரிவுசெய்யவில்லை என இது தொடர்பாக அறிந்த தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.

அமைதியின்மையை அடக்க இராணுவத்தை தரையிறக்கிய துனீஷியா

நாள் கணக்கான சமூக அமைதியின்மையை அடக்குவதற்கு உதவுவதற்காக இராணுவப் பிரிவுகளை துனீஷியா தரையிறக்கியுள்ளது.

‘இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாது’

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விடயத்தில், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது என, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிசிஆர் வதந்தி; பிள்ளைகளை அழைத்து சென்ற பெற்றோர்

அம்பாறை – சம்மாந்துறை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் பாடசாலைக்கு வருவதாக வதந்தி பரவியுள்ளது.

கிழக்கில் கொரோனா 2,000ஐ தாண்டியது

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியுள்ளது. இன்று (19) வரை 2,005 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், கல்முனைப் பிராந்தியத்தில் 1,000 ஐ தாண்டி, 1,051 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐ.தே.கவில் இருந்து மூவர் வெளியேற்றம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர், கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா: கிண்ணியா நகர் பாடசாலைகள் வெறிச்சோடின

கிண்ணியா நகர் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவின்றி, இன்றும் (18) வெறிச்சோடிக் காணப்பட்டன. கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அதிகரிப்பை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் 332 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 332 பேர் இன்று(18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 53408ஆக உயர்ந்துள்ளது.