மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு. உலகெங்கும் உழைக்கும் மக்களின் ஒரே தினம், மே தினம் மட்டுமே என்ற உண்மை, எம்மில் பலருக்கு உறைப்பதில்லை.

துறைமுக நகர்: ராஜபக்‌ஷர்கள் வைத்த தீ

(புருஜோத்தமன் தங்கமயில்)

தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்‌ஷர்களே’ என்று முழங்கி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில், இந்தச் சக்திகள் ஏற்றின.