ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம்


ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றையதினம், ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணி, இரண்டு வழிகளில் வந்துகொண்டிருந்தது. மெசஞ்சர் வீதி பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பகல் 12.15யை அண்மித்திருந்தது.

பாகிஸ்தானில் வெடிக்கும் வன்முறைகள்

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக தெஹ்ரீக்-இ-லாப்பாய்க் கட்சியினரால் (டி.எல்.பி) பிரான்ஸ் அரசுக்கெதிராகப் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

‘சீனா மேலும் அடக்குகிறது, ஆக்ரோஷமாகவிருக்கிறது’

அதிகரித்து வரும் பலம் வாய்ந்ததாக இருக்கின்ற சீனாவானது, உலக ஒழுங்குக்கு சவால் விடுப்பதாகவும், உள்நாட்டில் மேலும் அடக்குமுறையுடன் செயற்படுவதாகவும், வெளிநாடுகளில் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படுவதாக, சி.பி.எஸ் தொலைக்காட்சியின் 60 மினிட்ஸுடனான நேர் காணலில், ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் ஒரு ஜனநாயக உரிமை

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கையில், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்த 1992ஆம் ஆண்டு காலப்பகுதி. 1977 இலிருந்தே ஐக்கிய தேசிய கட்சிதான் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட, அவர்கள் பகீரதப் பிரயத்தனத்தை முன்னெடுத்த காலகட்டம் அது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டை முழுமையாக முடக்கினால் பட்டினி மரணம் ஏற்படுமெனத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவ சோதனைச் சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய மாநிலத் தேர்தல் முடிவுகள்

(Maniam Shanmugam)

இந்தியாவின் 5 மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகியவற்றுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தபடியே முடிவுகள் அமைந்துள்ளன.இந்த 5 மாநிலங்களில் அசாமில் மட்டுமே மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீண்டும் தனது ஆட்சியைத் தக்க வைக்க முடிந்துள்ளது.

அதிகாரப் பகிர்வுப் பாதையில் முன்னேற கடந்தகால அநுபவங்கள் பாடங்களாக வேண்டும்

(அ. வரதராஜா பெருமாள்)

இலங்கையில் மாகாண சபை முறைமையை உருவாக்குவதற்கும் அதற்குரிய சட்டவாக்க மற்றும் நிறைவேற்றதிகாரங்களை வழங்குவதற்கும் தேவையான அரசியல் யாப்பு ஏற்பாடுகள் இலங்கையின் அரசியல்யாப்பில் 13வது தடவையாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன.
வரலாற்று அநுபவங்களைத் அறிந்து கொள்வது அவசியமாகும்.

சமீபத்தில் ஒரு ராஜஸ்தான் சேட்டான் கடையில் அவன் சொல்லும்போது கேட்டது,

(Elumalai)


” உங்க ஊர்காரங்க 10 ரூபாய்க்கு உண்மையான சந்தனம் விற்கும்போது பக்கத்துல நாங்க கடை போட்டு சானிய அரைச்சு 5 ரூபாய்க்கு வித்தா போதும்..
உங்க ஊர்கார்ன்க சேட்டான் கம்மியா கொடுக்கிறான் அப்டின்னு வாங்கி நெத்தில பூசிட்டு போவாங்க கிருக்கனுங்க..
இவனுங்களுக்கு சந்தனமா சானியா அப்படின்றது தேவை இல்லை..
சேட்டான் கம்மியா கொடுக்கிறான் அப்படினு சாணிய வாங்கிட்டு சந்தனம் விக்கிறவன திட்டிட்டு போவனுங்க..கிருக்கணுங்க..

கிர்கிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை மோதல்களில் 31 பேர் பலி

கிர்கிஸ்தான் – தஜிகிஸ்தானின் பிரச்சினைக்குரிய எல்லையொன்றில், தண்ணீர்ப் பிரச்சினையொன்றையடுத்த மோதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் காயமடைந்ததுடன், 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மே தினம் அது தொழிலாளர் தினம்

(சாகரன்)

மனித குலத்தை பெரும் அழிவில் இருந்து மீட்பதற்கு நேர அளவு பார்க்காமல் தினம் ஒன்றிற்கு 8 மணி நேர வேலை என்ற தொழிலாளர் உரிமைகளை தூக்கி எறிந்துவிட்டு அர்பணிப்புடன் தமது உயிரையும் கொடுக்கத் தயார் என்று போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ தூய்மைத் தொழிலாளர்கள்…. அத்தியாவசிய சேவைகளின் தொழிலாளர்களுக்கு முதலில் எமது மரியாதை கலந்து பாராட்டுக்கள்… வாழ்த்துகள்…. தலை வணங்குகின்றேன் உங்கள் சேவையை.