இன்று தேசிய எதிர்ப்பு தினம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

புதிய வருமான வரி திருத்தத்தை மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று தேசிய எதிர்ப்பு தினத்தை செயற்படுத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன் பிரதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.

21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்

நான்கில் ஒருவருக்கு நீரிழிவு – புதிய ஆய்வு

இலங்கையில் உள்ள வயது வந்தவர்களில் நான்கில் ஒருவருக்கு (23%) நீரிழிவு நோய் உள்ளதுடன், மூவரில் ஒருவருக்கு (31%) உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இலங்கை பல்கலைக்கழகங்கள்,  அவர் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI)மற்றும் சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் (IHP) என்பன இணைந்து 2019ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நிலநடுக்கம்

புத்தள பிரதேசத்தில் சில கிராமங்களில் இன்று (22) பிற்பகல் 11.47 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை தாங்கள் உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஒரு வினாடிக்கு மட்டுமே நிலம் நடுங்கியதாக தெரிவித்த மக்கள்,அப்போது மயில்கள் உள்ளிட்ட பறவைகள் கடுமையான சத்தங்களை எழுப்பிக்கொண்டு பறந்தன என்றனர்.

நடிகவேள் எம்.ஆர். ராதா

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” இது ஒரு மகா கலைஞனின் எடைக்கல் வார்த்தை.

“தலைவர் கிருஷ்ணர் வரம்பெற்றவர்: அவருக்கு சாவு இல்லை”

விடுதலைப் புலிகள் தலைவருடன் பழநெடுமாறன் 40 வருடகாலமாக  நெருங்கிய தொடர்புடையவர் அவருக்கு மேல் இடத்தில் இருந்து அனுமதி வந்திருக்கலாம். அதேவேளை, கிருஷ்ணர் வரும் பெற்றவர் தலைவர். அவருக்கு சாவு என்றுமே இல்லை  அவர் மீண்டும் மக்கள் மத்தியில் வருவாராக இருந்தால் அது ஜனநாயக ரீதியில் எமது மக்களின் இனவிடுதலைக்கான முன்னெடுப்புகளுடன் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடனேயே அவர் தோற்றம் பெறுவார் என  புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் கே. இன்பராசா தெரிவித்தார்.

தேர்தல் கடமைகளை இடைநிறுத்தவும்

தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் தீர்மானத்தை அடுத்து,  நாளையதினம் (20) முதல் வழமையான அலுவலக நேரங்களில் செயற்படுமாறும் தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேரக் கடமைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் தேர்தல்: ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

முன்னொரு காலத்தில் ஜப்பானில்….

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடை முறையில் இருந்தது.

அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டுவிட வேண்டும்.

இந்திய அரசு தமிழ் மக்களினதும் எதிரி!

இன்னுமொரு உக்ரைனை திருமலையில் உருவாக்க அத்திவாரம்!!

மசூதிகளையும் தேவாலயங்களையும் அழிக்க இலங்கையில் ராமாயண யாத்திரைக்கு முயற்சி!!!

இந்திய அரசை நம்பியதினால் தமிழர்களுக்கு முதலில் ஏற்பட்டது அழிவு இரண்டாவது ஏற்பட்டது பேரழிவு இனி ஏற்பட இருப்பது மீள முடியாத பேரழிவு. இலங்கையில் தமிழ் – சிங்கள மக்களிடையே இருந்த முரண்பாட்டை தீர்த்து வைக்கத் திறமையற்ற, படித்த ஆனால் மூன்றாம் தர சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள், தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்ப போட்டி போட்டு, இனவாதத் தீயை வளர்த்தன. இவர்கள் இலங்கையை அந்நிய சக்திகளிடம் கையளித்து, கடந்த 75 ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்து வருகின்றனர். அதன் உச்சமாக தற்போது இலங்கையின் இயற்கைத்துறைமுகமான திருகோணமலை எதிர்கால யுத்தத்தின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டு வருகின்றது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 30 பேர்வரை இரு இரு விசேட விமானங்களில் பெப்ரவரி 14 அன்று இலங்கை வந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.