பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையால் மூடிமறைத்தல்

(எம்.எஸ்.எம் ஐயூப்)

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்த காலக்கெடு இன்னும் மூன்று நாள்களில் முடிந்து விடும். அதற்கு, தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு நேற்றுடன் (31) முடிவடைந்தது. 

சுதந்திரத் தினத்தில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு  பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு,  நாளை (03) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன.

பிரான்ஸ் கொந்தளிக்கிறது!

எங்கு நோக்கிலும் மக்கள் தலைகள்!!
மக்களை அடக்க 11 ஆயிரம் அதிகாரிகள்!!
பிரான்ஸ் முழுவதும் எழுந்துள்ள மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறையைத் தயார்படுத்துமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆணையிட்டார்.

அதனடிப்படையில் 11 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பிரான்ஸ் நாட்டுத் தெருக்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தலைநகர் பாரிஸ் வீதிகளில் ஆயுதபாணிகளாக உலாவி வருகின்றனர். மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.

ஓர் அற்புதன்


(சமஸ் Samas)

சில வாரங்களுக்கு முன் பர்ஸை ரயிலில் நான் தவறவிட்டதைப் பகிர்ந்திருந்தேன். சில ஆயிரம் பணம், வங்கி பண அட்டைகள், அடையாள அட்டைகள் அதில் இருந்தன. ரயில் நிலையத்தில் விசாரித்தேன். பயன் இல்லை. கையோடு வங்கி அட்டைகள் செயலாக்கத்தை முடக்கிவிட்டேன். அடையாள அட்டைகளுக்குப் பிரதிகள் இருந்தன. அதோடு மறந்துபோனேன்.

பகிரங்க மன்னிப்பு கோரினார் மைத்திரி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று(31) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, இவ்வாறு பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு துயரச் சம்பவம் இடம்பெற்றமைக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை (02) முதல் அமுலுக்கு வருகிறது.