வடக்கில் மாபெரும் கண்டனப் போராட்டம்

வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பணிப்பெண்களுக்கு இது கட்டாயம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு தேசிய தொழிற்கல்வி தகைமைச் சான்றிதழ் (NVQ) சனிக்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், 28 நாட்கள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என்றும் நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கம் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

புதிய சட்டம் பன்மடங்கு மோசமானது

“தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மேலாக உள்ள பன்மடங்கு மோசமான சட்டமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் காணப்படுகின்றது” என்று, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன் தெரிவித்தார்.