காலிஸ்தானி வன்முறை: மேலும் மூவர் கைது

மெல்போர்னில் காலிஸ்தானி ஆதரவு ஆதரவாளர்களுக்கும் இந்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே  ஜனவரி பிற்பகுதியில் வெடித்த வன்முறை சச்சரவு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய மாநிலம் விக்டோரியா பொலிஸ் தெரிவித்துள்ளது.

நாணய நிதியமும் ஜனாதிபதி தேர்தலும்

(எம்.எஸ்.எம் ஐயூப்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்படும் நிலைமைதான் தெரிகிறது.  முதலாவதாக, மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அரசாங்கம் நிதியை வழங்காத காரணத்தால் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இம்முறையும் அதே காரணத்தால், தேர்தல் ஒத்திவைக்கப்படப் போகிறது. 

‘வெடுக்குநாறி’ அழிப்பும் புல்லுருவிக் கூட்டமும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

வவுனியா, ஒலுமடு  வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. 

கடற்றொழிலாளர்கள் போராட்டம்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் கடற்றொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

இலங்கை மத்திய வங்கியினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316 ரூபாய் 75 சதமாகவும் விற்பனை விலை 334 ரூபாய் 20 சதமாகவும் நேற்றைய தினத்தில் பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் (31) ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளதுடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் பெறுமதி உயர்ந்துள்ளது. 

மற்றுமொரு விலை குறைப்பு செய்தி

அனைத்து களைகொல்லிகள் மற்றும் பூச்சிகொல்லிகளின் விலையை 20 சதவீதத்தால் குறைப்பதற்கும், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகளின் விலையில் 40 சதவீதம் வரை சலுகைகளை வழங்குவதற்கும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த  தமிழர்கள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று (03) விடுதலை செய்யப்பட்டனர்.  2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த  க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.  

ஜீவன் அதிரடி : லிங்கத்துடன் வெடுக்குநாறி விரைந்தார்

சேதமாக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சற்றுமுன்னர் சென்றிருந்தார். அவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமே அங்கு சென்றிருந்தனர்.

அமெரிக்க டாலரைக் கை கழுவும் ஆசியான் நாடுகள்!

(Maniam Shanmugam)

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்ட மைப்பு (ஆசியான்) உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில், அமெரிக்க டாலர், யூரோ, யென் மற்றும் பவுண்டு ஆகிய நாணயங்களை நிதிப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்திட வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். ஆசியான் அமைப்பில் புருனேய், கம்போடி யா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன.

பலஸ்தீன மேற்குக் கரை மற்றும் காஸா போன்று மாறிவரும் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை

இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்கிறது. பலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல், முழு நகரையும் உரிமையாக்க முற்படுவதை அங்கீகரித்துள்ள அமெரிக்காவும் வேறு சில ஐரோப்பிய நாடுகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு இலட்சம் யூதர்கள் குடியேற்றப்பட்டதைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சட்டங்களின்படி இக் குடியேற்றங்கள் தவறு என்றும் அமைதிக்குத் தடையாக உள்ளதாகவும் பலத்தீனம் கூறினாலும், இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மறுக்கின்றது.