சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

றுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் 20  சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் சுதந்திரம் மக்களுக்கானதாகவன்றி அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்பதை சுதந்திரத்திற்கு பின்னதான முதற் தசாப்தகாலம் தெளிவாகக் காட்டி நின்றது. ஆனால் சுதந்திர இலங்கையின் இனவாதப் போக்கை வெளிப்படையாக காட்டுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.

மட்டக்களப்பு நண்டு

மட்டக்களப்பு நண்டு பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லாததால், சின்ன அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். யாழ் பல்கலைக்கழகம் போன புதிதில், சாப்பாட்டு நேரத்தில் வந்த ஒரு சீனியர், ராகிங் என்ற பெயரில் ஒரு கவிதை சொல்லு என்றார். அப்போது நண்டுக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

வடக்கில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

தமிழ் தேசியக்கட்சிகளின் ஒன்றிணைந்த எற்பாட்டில்  பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிராக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (03) யாழ்ப்பாணம் சுன்னாகம் மத்திய பேருந்து நிலையம், சந்தைப்பகுதியில் இருந்து ஆரம்பமாகியது.

வலுக்கிறது இந்திய – கனடா விரிசல்

இந்தியாவில் இருந்து 40 கனடா தூதரக அதிகாரிகளை அதிரடியாக இந்தியா வெளியேற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மோதல் நிலைகள் தொடர்வதுடன், 41 கனட தூதரக அதிகாரிகளை திரும்ப  அழைக்குமாறு கனடாவிடம் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

திணைகளுக்கென இசைவழங்கிய தமிழிசையும் அதை ஒத்த கிரேக்க இசையும் :

(TSounthar Sounthar)


பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றையும் கொடுத்தும், பெற்றும் மனித நாகரீகத்தை வளர்த்துள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும் பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் கண்டுபிடித்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே ஒரு நாகரீகத்தால் வளர்ந்த ஒன்றல்ல.

உடன் கட்டை ஏறுதல்

Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான். சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல் எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.

How to grow a young kiwi tree in a pot

(Vaithiyanathan Loganathan)


கிவி விதையிலிருந்து கிவி மரத்தை வளர்ப்பது ஒரு வேடிக்கையான மற்றும் பலனளிக்கும் திட்டமாகும். இருப்பினும், கடைகளில் விற்கப்படும் கிவி பழங்கள் எப்பொழுதும் சாத்தியமான விதைகளை உற்பத்தி செய்யாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆயினும்கூட, சாத்தியமான விதைகள் கொண்ட கிவி பழம் உங்களிடம் இருந்தால், ஒரு தொட்டியில் ஒரு இளம் கிவி மரத்தை எப்படி வளர்ப்பது என்பது இங்கே.

பூக்களுக்கும் பூக்களுக்கும் கல்யாணமாம் கல்யாணம்..!

(-ஆசி கந்தராஜா-)

சிட்னியில் இப்போ வசந்த காலம்.

இன்று 2 October 2023, ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அரச விடுமுறை. உலகமெங்கும் மே மாதம் 1ம் திகதி தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும்போது, ஏன் நியூ சவுத் வேல்ஸ்ஸில் இன்று விடுமுறை எனக் கேட்க்காதீர்கள். இங்கு இப்படித்தான்.

தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா?

(என்.கே.அஷோக்பரன்)

கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை.

மாலத்தீவின் புதிய ஜனாதிபதி முயிசு

தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் முகமது முய்சு வெற்றி பெற்றார். அதன்படி, மாலத்தீவின் அடுத்த ஜனாதிபதியாக  45 வயதான முயிசு பதவியேற்கவுள்ளார். முய்சு பெற்ற வாக்குகளின் சதவீதம் 54 என்று கூறப்படுகிறது. முய்சு தலைநகர் மாலேயின் மேயராகவும் பணியாற்றியுள்ளார். அவர் சீன சார்பு கொள்கையை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில், முயிசுவுடன் போட்டியிட்ட மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் சோலி, 61, தோல்வியை ஏற்று, முயிசுக்கு வாழ்த்து தெரிவித்தார். இப்ராஹிம் சோலி ஒரு இந்திய கொள்கையை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.